Pudhcherry CM Rangasamy | Puducherry Rains (Photo Credit: @NewsArenaIndia / @Bagalavan_TNIE X)

டிசம்பர் 02, பாண்டிச்சேரி (Pondicherry News): வங்கக்கடல் பகுதியில் நவம்பர் மாதத்தின் இறுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, ஃபெங்கால் (Fengal Cyclone) புயலாக உருவெடுத்து நாகப்பட்டினம் நோக்கி வந்தது. இதனிடையே, ஒருநாளுக்கு பின் கடலுக்குலேயே வலுவிழந்த புயல், ஒரு நாளுக்கு பின் மீண்டும் ஃபெஞ்சல் புயலாக உருப்பெற்று இருந்தது. இந்த ஃபெஞ்சல் புயல், புதுச்சேரிக்கு (Pondicherry Rains) வடக்கு பகுதியில் கரையை கடக்கும் எனவும், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கலாம் எனவும் சென்னை (Chennai IMD) வானிலை (Weather) ஆய்வு மையம் அறிவித்தது. H Raja: திமுக எம்.பி கனிமொழி, பெரியாருக்கு எதிரான கருத்து; எச்.ராஜாவுக்கு சிறை தண்டனை விதிப்பு.. தமிழக அரசியலில் பரபரப்பு.! 

வடகடலோர மாவட்டங்கள் சிக்கியது:

புயல் கரையை கடப்பதற்கு முன்னதாக, புயலின் மழை கொடுக்கும் மேகங்கள் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை சூழ்ந்த காரணத்தால், கனமழை அங்கு கொட்டித்தீர்ந்தது. மாலை நேரத்தில் கரையை கடக்கத் தொடங்கிய புயல், கரையை கடந்த பின்னர் புதுச்சேரியை மையமாக வைத்து அசைவற்று நின்றது. இதனால் புயலின் மழை கொடுக்கும் மேகங்கள் சென்னையில் இருந்து விலகி புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை தாக்கியது.

கரைபுரண்டு ஓடும் (Viluppuram Floods) வெள்ளம்:

இந்த மழை கொடுக்கும் மேகங்களால் உருவான மழை, புதுச்சேரி வரலாற்றில், கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத கடும் மழையை தந்தது. இதனால் புதுச்சேரி நகரம் வெள்ளத்தில் மிதந்தது. மீட்பு பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படை, இராணுவம் களமிறங்கி இருந்தது. அதனைத்தொடர்ந்து, புயலின் தாக்கத்தால் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக, கெடிலம், தென்பெண்ணை, சங்கராபரணி, வராகி ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டு புதுச்சேரியில் கரைபுரண்டு ஓடுகிறது.

சேதம் அதிகம்:

இதனால் சாலை மற்றும் இரயில் வழித்தட போக்குவரத்துகள் ஆங்காங்கே துண்டிக்கப்பட்டுள்ளது. மாற்று வழிகளில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி கண்டுள்ள வரலாறு காணாத மழை காரணமாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது பொருட்சேதங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது.

நிவாரணம் அறிவிப்பு:

இந்நிலையில், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி (Puducherry CM Rangasamy) இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "புதுச்சேரி மாநிலத்தில் மழை-வெள்ளத்தால் உயிரிழந்த நபருக்கு ரூ.4 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும். ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மாடு உயிரிழந்து இருந்தால் ரூ.40 ஆயிரமும், படகு சேதமானால், சீரமைக்க ரூ.10 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.