டிசம்பர் 02, பெங்களூரு (Karnataka News): கோவாவில் இருந்து சுமார் 30 பயணிகளுடன் பெங்களூரு (Goa To Bengaluru) நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இன்று (டிசம்பர் 02) அதிகாலை 4.30 மணியளவில், கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிரா தாலுகாவில் உள்ள சிக்கனஹள்ளி மேம்பாலத்தில் இருந்த சாலை தடுப்பில் பேருந்து மோதி (Bus Accident) விபத்துக்குள்ளானது. Heart Attack: ஒரே ஊரை சேர்ந்த 5 பேருக்கு அடுத்தடுத்து நெஞ்சுவலி.. கோவிட் தடுப்பூசி காரணமா..? விவரம் உள்ளே..!
இந்த கோர விபத்தில் 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். மேலும், விபத்தில் படுகாயமடைந்தனர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், பலியானவர்கள் ஷெபாலி சிங், உர்வி மற்றும் பிரியங்கா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.