நவம்பர் 30, லாகோஸ் (World News): வடக்கு நைஜீரியாவின் நைஜர் ஆற்றில் (Niger River) நேற்று (நவம்பர் 29) படகு விபத்து நடந்துள்ளது. படகில் 200-க்கும் அதிகமானோர் பயணித்துள்ளனர். அவர்கள் அனைவரும் கோகி பகுதியில் இருந்து நைகர் நகரில் உள்ள உணவுச் சந்தைக்குச் செல்லும் போது இந்த விபத்து நடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த மீட்புக் குழுவினர், இதுவரை சுமார் 27 சடலங்களை மீட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என்று கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. Israel Hamas War: இஸ்ரேல் – ஹமாஸ் போர்.. லெபனானுடனான போர் நிறுத்த ஒப்பந்த மீறல்..!
இந்த விபத்துக்கான காரணத்தை அரசுத் தரப்பு உறுதி செய்யாவிட்டாலும், உள்ளூர் ஊடகங்கள் படகில் அதிகளவில் மக்கள் ஏற்றப்பட்டதாலேயே விபத்து நடந்ததுள்ளது என தெரிவிக்கின்றன. நைஜீரியாவில் சரியான சாலை வசதிகள் இல்லாத பகுதிகள் நிறைய இருக்கின்றன. அப்பகுதிகளில் எல்லாம் இன்றளவும் படகு சவாரி தான் ஒரே போக்குவரத்து வசதியாக இருக்கிறது. இந்நிலையில், அந்தப் படகுகளில் அதிகளவில் மக்களை ஏற்றுவதும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இதனால், அடிக்கடி படகு விபத்துகளும் (Boat Capsized) நடக்கின்றன. கடந்த அக்டோபர் 03-ஆம் தேதி நடந்த படகு விபத்தில் சுமார் 60 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.