Lonwabo Tsotsobe | Thamsanqa Tsolekile | Ethy Mbhalati File Pic (Photo Credit: @Thekeycritic X)

நவம்பர் 30, பிரிட்டோரியா (Sports News): தென்னாப்பிரிக்காவில் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ராம் ஸ்லாம் டி20 சேலஞ்ச் (2015-2016 Ram Slam T20 Challenge) போட்டி தொடரில் மேட்ச் பிக்சிங்கில் (Match-Fixing) ஈடுபட்டதாக 3 முன்னாள் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களான லோன்வாபோ சோட்சோபே (Lonwabo Tsotsobe), தம்சனகா சோலேகிலே (Thamsanqa Tsolekile) மற்றும் அதி எம்பலாட்டி (Ethy Mbhalati) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்களை 'ஹாக்ஸ்' என்று அழைக்கப்படும் முதன்மை குற்ற புலனாய்வு இயக்குநரகம் (DPCI) கைது செய்தது. NZ Vs ENG 1st Test: ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை அபாரம்.. அசாத்தியமான கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்..!

இதில், அதி எம்பலாட்டி நவம்பர் 18-ஆம் தேதி அன்று கைது செய்யப்பட்டார். தம்சனகா சோலேகிலே மற்றும் லோன்வாபோ சோட்சோபே ஆகிய இருவரும் நவம்பர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தனித்தனியாக கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, முதன்மை குற்ற புலனாய்வு இயக்குநரக தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் காட்ஃப்ரே லெபயா, ஹாக்ஸ் (Hawks) விளையாட்டின் நேர்மை மற்றும் தொழில்முறையை பராமரிக்க செயல்படுகிறது. இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்துக்கு (CSA) அவர் நன்றி தெரிவித்தார்.

இதனையடுத்து, அதி எம்பலாட்டி பிரிட்டோரியா சிறப்பு வணிக குற்றவியல் நீதிமன்றத்தில் (Pretoria Special Commercial Criminal Court) ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரது விசாரணை 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையில், லொன்வாபோ சோட்சோபே மற்றும் தம்சனகா சோலேகிலே ஆகியோர் மீது ஊழல் தடுப்பு மற்றும் போராடுதல் சட்டம் (PRECCA) 2004-இன் கீழ் 5 ஊழல் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர்களது வழக்கு நேற்றைய தினம் (நவம்பர் 29) விசாரிக்கப்பட்டது. மேலும், 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.