Parliament (Photo Credit: @ANI X)

டிசம்பர் 02, டெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது (Parliament Winter Session) நவம்பர் 25ம் தேதி தொடங்கி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எனவும், 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம்.

குளிர்கால கூட்டம் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து மத்திய அமைச்சர்கள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க தயங்குகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டுள்ளது. Father Kills Daughter: மாற்றுத்திறன் மகளை கொன்று, தந்தை தூக்கிட்டு தற்கொலை.. வேலையின்மை விரக்தியால் சோகம்.!

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய மக்களவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு புயல் பாதிப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கோரி திமுக தரப்பு எம்.பி டி.ஆர்.பாலு (DMK T R Baalu) ஒத்திவைப்பு நோட்டீஸ் அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் கனமழை பாதிப்புகளை கணக்கிட மத்திய அரசின் குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்தும் தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார். அதில், “தமிழகத்திற்கு 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கிறேன். புயலால் ஏற்பட்டுள்ள பெரும் சேதத்தை மதிப்பிடுவதற்கு மத்தியக் குழுவை நியமிக்குமாறு மத்திய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் ஃபெஞ்சல் புயலாக (Fengal Puyal) உருவானது. இந்த புயலின் தாக்கம் காரணமாக, 2 நாட்களுக்கு முன் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடந்தபின், புதுச்சேரியை ஒட்டிய பகுதிகளில் சுமார் அசைவற்று மையம் கொண்டதன் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை 15 மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி நகர பகுதிகள் கடும் வெள்ளத்தை சந்தித்துள்ளது.

ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக எம்.பி டி.ஆர்.பாலு: