World AIDS Day (Photo Credit: LatestLY)

டிசம்பர் 02, டெல்லி (Special Day): ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ம் தேதி, 'உலக எய்ட்ஸ் தினம்' (World AIDS Day) கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் நோக்கம், எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்களை தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை எதிர்த்தும், இந்த நோய் பற்றிய தீவிரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் ஆகும். இந்நாளில் உலக சுகாதார நிறுவனம், ஒரு ஒரு வருடமும் ஒரு தலைப்பு வைத்து பின்பற்றி வருகிறது. இந்த வருடத்திற்கான தலைப்பு “Take the Rights Path” என அறிவித்துள்ளது. கொரோனாவிற்கு பின் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு காரணமாக அனைவருக்கும் சமமான சிகிச்சை கிடைக்காமல் இருப்பதாலும், சமத்துவம் இல்லாமல் இருப்பதாலும் இந்த ஆண்டு இத்தலைப்பை வைத்துள்ளனர். Ulli Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் உள்ளி தீயல் ரெசிபி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!

இந்தியாவில் 1986ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்டது. தற்போது நிலவரப்படி இந்தியாவில் 20 லட்சத்துக்கு அதிகமானோர் ஹெச்ஐவி தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் சுமார் 3 கோடியே 80 லட்சம் மக்கள் ஹெச்ஐவி வைரஸுடன் வாழ்கிறார்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆரம்பத்தில் கண்டறிந்தாலும் அவர்களை சில இடங்களில் ஒதுக்கி வைப்பதால் அவர்களுக்கான சிகிச்சை தாமதமாகவே கிடைக்கிறது.

தற்போது முறையான மருத்துவ சிகிச்சை இருப்பதால் எய்ட்ஸ் நோயளிகளின் வாழ்நாள் அதிகரித்துள்ளது. 75% நோயளிகள் மட்டுமே அவர்களுக்கு ஹெச்ஐவி நோய் இருப்பதை உணர்கிறார்கள். அதிக மக்கள் ஹெச்ஐவி பரிசோதனை செய்துகொள்ளமால் இருக்கிறார்கள். ஒருவரை தொடுவது மூலமாகவோ, சளி மூலமாகவோ எய்ட்ஸ் பராவாது. இது நோயளியின் இரத்தம் பிறரின் உடம்பில் கலக்கும் போது தான் அவருக்கும் தொற்று ஏற்படும்.