டிசம்பர் 02, சென்னை (Astrology Tips): கடக ராசியில் இருக்கும் ஆயில்யம் நட்சத்திர காரர்களே, உங்களுக்கு பொதுவாகவே முன்யோசனை கிடையாது. எதையுமே அனுபவப்பட்டு தான் திருந்துவீர்கள். சுய புத்தியும் குறைவு. பிறர் யார் எதை கூறினாலும் அப்படியே நம்பி விடுவீர்கள். இது திருமண வாழ்க்கையில் சில கசப்பான அனுபவங்களை ஏற்படுத்தும். யார் எதை கூறினாலும், அது சரியா தவறா என ஆராய்ந்து பார்த்து, உண்மை நிலையை தெரிந்து, அதற்கு தகுந்தபடி நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். தவறாக புரிந்து கொள்ளும் குணம் உடையவர்கள். இருப்பினும் நீங்கள் மிகவும் நல்லவர்கள். மனதில் எதையும் உங்களுக்கு ஒழித்து வைக்க தெரியாது.
உங்களிடம் ரகசியம் கிடையாது. நீங்கள் ஒரு வெள்ளந்தியானவர். நீங்கள் ஒருவரை காதலித்தால் கூட அதை ரகசியமாக வைத்திருக்க உங்களுக்கு தெரியாது. ஊர் முழுக்க உடனடியாக தெரிந்து விடும். வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கக் கூடியவர். இருக்கட்டும். தற்போது ஒரு கடுமையான சூழலை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள். வேலை இழப்பு, விபத்து, பொருள் நஷ்டம், கடன் தொல்லை, நோயால் அவதி, கணவன் மனைவியிடையே பிரச்சனை. ஒரு சிலர் ஜெயில் வாசம்,போலீஸ், கோர்ட், கேசு என பலதரப்பட்ட துன்பங்களை அனுபவித்து வரும் ஆயில்ய நட்சத்திரக்காரர்களே, உங்களுக்கு கூடிய விரைவில் நல்ல காலம் பிறக்கப் போகின்றது. World AIDS Day 2024: உலக எய்ட்ஸ் தினம்.. பாதிக்கப்பட்டவர்களின் ஆயுளை எப்படி பாதுகாக்கலாம்?!
ஜாதகத்தில் திசை புத்திகள் நன்றாக இருப்பவர்கள் கூட இந்த அஷ்டம சனியின் பாதிப்பில் ஓரளவு துவண்டு தான் போயிருப்பீர்கள். தான தர்மங்கள், இறை வழிபாடுகள் அன்னதானம் ,அர்ச்சனை, பூஜைகள் மற்றும் தீவிரமான இறை வழிபாட்டில் நீங்கள் இருப்பவர்கள் ஆக இருந்தால் இந்த அஷ்டம சனி கூட உங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. மேலே சொன்ன துன்பங்கள் அனைத்தும், தான தர்மங்களை செய்யாதவர்கள், பிறருக்குத் துன்பம் இழைப்பவர்கள், பிறர் துன்பத்தைக் கண்டு ரசிப்பவர்கள், கெட்ட எண்ணம் உடையவர்கள், பொறாமை குணம் உடையவர்கள் இவர்களைத்தான் அந்த அஷ்டமச்சனி பாதிக்கும்.
எந்த ஒரு புதிய முயற்சியிலும் நீங்கள் இறங்க கூடாது. என் அனுபவத்தில் ஆயில்யம் நட்சத்திரகாரர்கள் அதிகமானவர்கள் வேலையை இழந்து இருக்கின்றார்கள். இந்த அஷ்டம சனியில் இந்த நிலை மார்ச் மாதம் வரை நீடிக்கும். அதனால் நீங்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கோயில் சென்று வழிபடுங்கள். சிவன் கோயில் சென்று அம்பாளை வழிபட, அர்ச்சனை செய்ய, பரிகாரங்கள் செய்துவர உங்கள் துன்பங்கள் நீங்கி இன்பம் பெருகும், அரசியல்வாதிகள் கெட்ட பெயரை சம்பாதித்து இருப்பார்கள், பதவி பறிபோய் இருக்கலாம் அல்லது அவர்கள் நினைத்தது நடக்காமல் இருக்கும்.
பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடம் போகவே பிடிக்காது. பள்ளியிலும் வீட்டிலும் கெட்ட பெயர் எடுத்துக் கொண்டிருப்பார்கள். கலை துறையினருக்கு இது போதாத காலம். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. இவர் உழைக்க இன்னொருவர் பெயரை தட்டிச் செல்வார். அரசு அதிகாரிகள் லஞ்சப் புகாரில் சிக்கி இருக்கலாம் அல்லது மெமோ கொடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கலாம். எந்த ஒரு புதிய நல்ல முயற்சிகளும் நடந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி நடந்திருந்தால் உங்கள் ஜாதகம் வலிமையாக இருக்கிறது என்று அர்த்தம். வரும் பங்குனி மாதம் முதல் நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களைத் தேடி வரும். நீங்கள் நினைத்தே பார்த்திராத விஷயங்கள் எல்லாம் உடனடியாக முடியும். Ulli Theeyal Recipe: கேரளா ஸ்பெஷல் உள்ளி தீயல் ரெசிபி செய்வது எப்படி..? அசத்தல் டிப்ஸ் இதோ..!
சித்திரை மாதத்திற்கு மேல் தொழில் வியாபாரம் சிறக்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமண தடை ஏற்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடக்கும், குழந்தை ஜனிக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். புதிய பணவரவு நீண்ட நாள் நிலுவை கடன்கள் எல்லாம் வசூல் ஆகும். ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் கிடைக்கும். மனைவி வழியில் ஆதாயங்கள் உண்டு. மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். புதிய தைரியம் கிடைக்கும்.
பரிகாரம்: அம்பாள் வழிபாடு மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு உங்களுக்கு புத்தி தெளிவையும், மன உறுதியையும் வழங்கும். கெடு பலன்களை குறைக்கும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வாருங்கள். அம்பாளுக்கு பாலாபிஷேகம் செய்து வாருங்கள். அன்னதானம் செய்து வாருங்கள். இந்த கிரக தோஷங்கள் ஒன்றும் உங்களை செய்யாது.
உங்கள் மதிப்பெண் 80.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.