Clashes Between Football Fans in Guinea (Photo Credit: @theinformant_x X)

டிசம்பர் 02, என்சரிகோர் (World News): மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் (Guinea) உள்ள என்சரிகோரில் நேற்று (டிசம்பர் 01) உள்ளூர் கால்பந்து (Football) போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண்டுகளித்தனர். இப்போட்டியில் நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த ஒரு தரப்பு ரசிகர்கள் ஆவேசத்தில் கால்பந்து மைதானத்திற்குள் நுழைந்தனர். இதனைக்கண்ட எதிர்தரப்பு ரசிகர்களும் மைதானத்திற்குள் புகுந்து, இரு தரப்பு ரசிகர்களும் பலமாக ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். Nigeria Boat Capsized: நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து; 27 பேர் பலி.. 100-க்கும் மேற்பட்டோர் மாயம்..!

இந்த மோதல் சற்று நேரத்தில் பெரும் கலவரமாக மாறியது. இதனால் மைதானத்திற்குள் வெளியேயும், சாலைகளிலும் சண்டையிட்டுக்கொண்டனர். மேலும், மைதானம் அருகே உள்ள காவல்நிலையத்துக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தால் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கால்பந்து மைதானத்தில் கலவரம்: