H Raja | Chennai HC (Photo Credit: @HRajaBJP X / Wikipedia)

டிசம்பர் 02, சென்னை (Chennai News): கடந்த 2018ம் ஆண்டு பெரியார் சிலை உடைப்பு மற்றும் பிப்ரவரி மாதம் திமுக எம்.பி கனிமொழி குறித்த சர்ச்சை கருத்துக்களை, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இந்த விஷயம் தொடர்பாக ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை நிறைவுபெற்று, வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரணை செய்யும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சிறை தண்டனை விதிப்பு:

இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த நவம்பர் மாதம் 14ம் தேதி நடைபெற்ற நிலையில், இன்று வழக்கின் தீர்ப்பு வெளியகியுள்ளது. அதன்படி, நீதிபதி ஜெயவேல் தனது தீர்ப்புகளை வழங்கினார். பெரியார் சிலை உடைப்பு குறித்து கருத்து மற்றும் திமுக எம்.பி கனிமொழி மீது விமர்சனம் முன்வைத்த எச்.ராஜா மீது பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு எதிராக நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. Krishnagiri Rains: கிருஷ்ணகிரியை பதறவிட்ட கனமழை; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. வெள்ளக்காடாக மாவட்டம்.! 

எச்.ராஜா குற்றவாளி:

மேற்கூறிய விவகாரத்தில் இரண்டு வழக்கிலும் தனித்தனியே என 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக, சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதால், அவர் மொத்தமாக ஒரு ஆண்டுக்கு சிறையில் இருக்க நேரிடும். மேலும், இரண்டு வழக்கிலும் ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

எச்.ராஜா வாதம் எடுபடவில்லை:

முன்னதாக எச்.ராஜா தரப்பு தன் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வழக்கு தொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவில் பகிரப்பட்ட தகவலைக் கொண்டு அவரின் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு சிறை தண்டனைக்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை நிறுத்தி வைப்பு:

இதனிடையே, இவ்விவகாரத்தில் எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில், தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.