Heart Attack (Photo Credit: Pixabay)

டிசம்பர் 02, அலிகார் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், அலிகாரில் (Aligarh) கடந்த 25 நாட்களுக்குள் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் மாரடைப்பால் (Heart Attack) உயிரிழந்துள்ளனர். அரானா கிராமத்தைச் சேர்ந்த மம்தா சவுத்ரி (வயது 20), மாநில காவல்துறையில் கான்ஸ்டபிள் பணிக்கான உடல் தகுதித் தேர்வுக்குத் தயாராகி வருவதால் தினசரி காலை மாலையில் ஓடி வருகிறார். கடந்த நவம்பர் 23ஆம் தேதி காலை ஓடும்போது மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக ஜேஎன் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் தெரிவித்தனர். Father Kills Daughter: மாற்றுத்திறன் மகளை கொன்று, தந்தை தூக்கிட்டு தற்கொலை.. வேலையின்மை விரக்தியால் சோகம்.!

மேலும், சிரௌலி கிராமத்தைச் சேர்ந்த மோஹித் சவுத்ரி, 6ஆம் வகுப்பு படித்து வந்தார். 14 வயது சிறுவன், ஆண்டு விளையாட்டு தினவிழா போட்டிக்கு தயாராகிக் கொண்டிருந்துள்ளார். கடந்த நவம்பர் 29-ஆம் தேதி பயிற்சியின் போது, ​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சற்று நேரத்தில் இறந்தார். இதற்கு அடுத்தபடியாக, நவம்பர் 30ஆம் தேதி லோதி நகரில் வசிக்கும் 8 வயது திக்ஷா தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். முன்னதாக நவம்பர் 5ஆம் தேதி, குழந்தை மருத்துவர் டாக்டர் லவ்னிஷ் அகர்வால் தனது வழக்கமான காலை நடைப்பயிற்சிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மேலும், 29 வயதான சையத் பர்கத் ஹைதர் நவம்பர் 20ஆம் தேதி அன்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்நிலையில், அலிகாரின் தலைமை மருத்துவ அதிகாரி நீரஜ் தியாகி, இறப்புகள் பற்றி கூறுகையில், ஆரோக்கியமான ஒருவர் ஒரு மணி நேரத்திற்குள் இறந்துவிட்டால், அதை திடீர் இதயத் தடுப்பு என்று சொல்வார்கள். கடந்த 20 ஆண்டுகளில் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. பெரும்பாலும் மாரடைப்புதான் காரணம். ஆனால், சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதயநோய் இருக்கிறது என்றார். இதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) ஆய்வு நடத்தியது. தடுப்பூசியால் திடீர் மாரடைப்பு ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கோவிட் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தெரிவித்தனர். கோவிட்க்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில், இளைஞர்களிடையே மாரடைப்பு வழக்குகள் அதிகரித்துள்ளன. அத்தகைய நோயாளிகளுக்கு மன அழுத்தம் ஒரு பெரிய காரணியாக இருந்தது என்று அலிகாரில் உள்ள கமல் ஹார்ட் கேர் சென்டரின் இருதயநோய் நிபுணர் டாக்டர் அசார் கமல் கூறினார்.