டிசம்பர் 02, செங்கம் (Tiruvannamalai News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெரியமுத்தூர் கிராமம், பெண்ணியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சாத்தனூர் அணை (Sathanur Dam), கர்நாடக மாநிலத்தில் உள்ள நந்திதுர்க், சென்னகேசவ மலையில் இருந்து பெண்ணையாற்றின் (Ponniyar) வாயிலாக நீரை பெறுகிறது. 432 கிமீ நீளம் கொண்ட பெண்ணையாறு, கர்நாடகாவில் தொடங்கி 112 கிமீ பயணத்திற்கு பின்னர் தமிழ்நாட்டில் 320 கிமீ பயணம் மேற்கொண்டு வங்கக்கடலை அடைகிறது.
மிகப்பெரிய முதலைப்பண்ணை:
சாத்தனூர் அணை 8100 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்கும் கொள்ளளவு கொண்ட, 119 அடி உயர அணை ஆகும். இதனால் திருவண்ணாமலை, செங்கம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் தாலுகா பெரும் பயனை அடைகிறது. இன்று வரை தமிழக முதல்வர்களின், கல்விகண்திறந்தவராக போற்றப்படும் முன்னாள் முதல்வர் காமராஜர் காலத்தி ல், 1957 அன்று சாத்தனூர் (Sathanur Dam) அணை திறக்கப்பட்டது. இங்கு ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய முதலைப்பண்ணையும் இருக்கிறது. Puducherry CM Rangasamy: புதுவையில் வரலாறு காணாத வெள்ளம்; ரேஷன் அட்டைக்கு ரூ.5000/- நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ரங்கசாமி..!
1972ல் அதிக நீர் வெளியேற்றம்:
சாத்தனூர் அணை கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக தமிழகத்தில் நுழைந்து, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் தென்பெண்ணையாராக (Then Pennai River) பாய்கிறது. இந்த பெண்ணையாறு பல கிளை ஆறுகளாகவும் பிரிந்து காணப்படுகிறது. பருவகாலங்களில் சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த 1972ம் ஆண்டு பெய்த கனமழை காரணமாக, 1.63 இலட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களின் பெண்ணையாறு (Then Ponniyar River), அதன் கிளை ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டது.
50 ஆண்டுகளுக்கு பின் வெள்ளம்;
இதனிடையே, ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடும் மழைப்பொழிவை சந்தித்த நிலையில், சாத்தனூர் அணையின் நீர் வரத்து கடுமையாக அதிகரித்தது. இதனால் கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்கு பின்னர், பழைய தரவுகளை பின்னுக்குத் தள்ளி, இன்று சாத்தனூர் அணையில் இருந்து 1.68 இலட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள பெண்ணையாறு, அதன் கிளை ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. Krishnagiri Rains: கிருஷ்ணகிரியை பதறவிட்ட கனமழை; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. வெள்ளக்காடாக மாவட்டம்.!
கரையோர மக்களே கவனம்:
புதுச்சேரியில் தொடங்கி கிருஷ்ணகிரி வரை வெளுத்து வாங்கிய ஃபெஞ்சல் புயல் தாக்கத்தின் மழையால், 2.75 இலட்சம் கனஅடி நீர் சாத்தனூர் அணையில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இது மிகப்பெரிய உச்சபட்ச அளவு ஆகும். இதனால் பெண்ணையாறு மற்றும் அதன் கிளை ஆறுகளில், கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ள நீரின் அளவு அதிகரித்தால், உடனடியாக அரசின் முகாமுக்கோ அல்லது உயரமான, பாதுகாப்பான இடங்களுக்கோ செல்வது நல்லது.
சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் நீர்:
சாத்தனூர் அணையிலிருந்து 1.68 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம். கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. pic.twitter.com/lQpeLV6Cz8
— Cuddalore Updates (@CuddaloreTN31) December 2, 2024
52 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேறும் பேய்மழை வெள்ள நீர்:
🔴சுமார் 52 ஆண்டுக்குப் பிறகு சாத்தனூர் அணையில் இருந்து 1.7 லட்சம் கன அடிக்கு மேல் நீர் வெளியேற்றம்!
🔹தென்பெண்ணை ஆற்றில் பதிவான 2-வது அதிகபட்ச வெள்ள அளவு இதுவாகும்; கடந்த 1972-ம் ஆண்டு சாத்தனூர் அணையின் வெளியேற்ற கொள்ளளவை விட (1.65 லட்சம் கன அடி), 2.45 லட்சம் கனஅடி அளவுக்கு… pic.twitter.com/t1jlHrCSIh
— Spark Media () December 2, 2024
கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்களால் பெண்ணையாறு வேறொரு அடைமொழியுடனும் அழைக்கப்படும். அந்த பெண்ணையாறுதான் தமிழ்நாட்டில் தென்பெண்ணையாறாக கரைபுரண்டு ஓடுகிறது.