டிசம்பர் 18, சென்னை (Health Tips): புதிதாக பிறந்த குழந்தைகள் அடிக்கடி அழுவது உண்டு. இவர்களின் அழுகைக்கான காரணத்தை கண்டறிய தெரியாமல் குடும்பமே திணறும் நிகழ்வுகளும் இங்கு உண்டு. பொதுவாக குழந்தைகள் பிறந்ததில் இருந்து முதல் 6 வாரங்களுக்கு, நாளொன்றுக்கு 2 முதல் 3 மணிநேரம் அழுவது இயல்பானதே ஆகும். சோர்வு, பசி, வாயுத்தொல்லை, வயிற்றுவலி, குளிர்ச்சியான அல்லது சூடான சூழ்நிலை, டயப்பர் ஈரமாவது போன்றவற்றுக்கு அழுவது உண்டு. இவர்களின் அழுகை குறித்த காரணத்தை நாம் கண்டறிந்தால், அவர்களை எளிதில் சமாதானம் செய்ய இயலும். வலி சார்ந்த உணர்வுகளை கைக்குழந்தைகள் அழுகையாக வெளிப்படுத்தும்.
வயிற்றை மடித்து வைத்து அழுதால்: குழந்தைகளுக்கு அவ்வப்போது ஏற்படும் பிரச்சனையில் முதன்மையானது வயிற்று வலி. நமக்கு இது சாதாரணம் எனினும், குழந்தைகளின் அழுகை வயிற்றுவலி தீரும் வரை ஓயாது. தனது தொடை வயிற்றுப்பகுதியை மடித்து வைத்து குழந்தை அழும் பட்சத்தில், அக்குழந்தை வயிற்று வலியால் அழுகிறது என்பது பொருள். குழந்தை அளவுக்கு அதிகமான பால் குடிப்பதால், வயிற்று உப்புசமாகி வலி ஏற்பட்டு அழும். அதேசமயத்தில், உணவுடன் காற்றும் குழந்தையின் வயிற்றுக்குள் சென்றாலும் வயிற்று வலி ஏற்படும். இதனால் பாலூட்டிய பின் குழந்தைகளை தோளில் சாய்த்து முதுகை லேசாக தட்டிக்கொடுப்பது நல்லது. இதனால் குழந்தையின் வயிற்றில் இருக்கும் காற்றுகள் வெளியேறி வலி உணர்வு நீங்கும். ஒவ்வாமை காரணமாக குழந்தை அழுகிறதா? என்பதையும் சோதிக்க வேண்டும். Irfan about Rohit Captaincy: ஹர்திக் மும்பை அணியை வழிநடத்துவதில் சவால்களை சந்திப்பார்: முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பேட்டி.!
பசியால் ஏற்படும் அழுகையை கண்டறிதல்: தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைக்கு கொடுக்கும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தை எடுத்துக்கொள்ளும் உணவு விரைவு செரிமானமாகி, சிறுநீர் மற்றும் மலமாக வெளியேறும். இது மீண்டும் பசியை ஏற்படுத்தும். குழந்தை அழுகையில் தாய் தனது விரலை நன்கு சுத்தம் செய்து குழந்தையின் வாயில் வைத்தால், குழந்தை விரலை சூப்பும் பட்சத்தில் பசியால் ஏற்படும் அழுகை என பொருள்படும். உடை விஷயத்தில் குழந்தைகளின் சருமம் பாதிக்காத வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இறுக்கமான ஆடைகள் மற்றும் சருமத்திற்கு சரிவர ஆடைகள் அணிய வேண்டாம். இதனால் அசௌரியம் ஏற்பட்டும் குழந்தைகள் அழும். பருத்தியினால் ஆன துணிகளை தேர்வு செய்வது சாலைசிறந்தது.
எறும்புகள், பூச்சிகளிடம் கவனம்: பச்சிளம் குழந்தைகளுக்கு டயப்பர் ஈரமாகும் வரையில் காத்திருந்து, குறிப்பிட்ட இடைவெளியில் அதனை மாற்றுவது நல்லது. குழந்தைகள் உறங்கும் இடத்தினை சுகாதாரமாகவும் வைக்க வேண்டும். அதேபோல, பூச்சிகள், எறும்புகள் கடிக்கின்றனவா? எனவும் சோதிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் நோயை சுயமாக சரி செய்யாமல், சந்தேகம் இருப்பின் மருத்துவரை நாடலம்.