டிசம்பர் 18, சென்னை (Sports News): ஐபிஎல் 2024 போட்டிகள் (IPL 2024) 2024ம் ஆண்டில் மார்ச் 23ல் தொடங்கி மே 29, 2024 வரையில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக தற்போது அணியின் வீரர்கள் தேர்வு, பயிற்சி என அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அணிகள் தயாராகி வருகின்றன. 2024 ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மோதிக்கொள்கின்றன.
மும்பை இந்தியன்ஸ்-க்கு புதிய கேப்டன்: இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியை கேப்டனாக ரோஹித் சர்மா (Rohit Sharma) வழிநடத்தி வந்த நிலையில், அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டு, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) அறிவிக்கப்பட்டார். இது ரோஹித் சர்மாவின் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், ரோஹித் ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார் என பல தகவலும் வைரலாகி வந்தன.
தோனியின் மீது திரும்பிய பார்வை: இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்பொருட்டு, அவர் அணியில் தொடர்ந்து நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரங்கள் இணையத்தில் சூடேறிய நிலையில், மறுபக்கம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தன்னை சர்வதேச அளவிலான போட்டிகளில் இருந்து விலக்கிக்கொண்ட தோனியின் பக்கம் பார்வை திரும்பி, அவர் கேப்டனாக தொடருவரா? நடப்பு ஆண்டுடன் கிரிக்கெட்-டில் இருந்து வெளியேறுகிறாரா? என கேள்விகள் எழுந்தன. Israel Airstrike: காசாவில் மீண்டும் கதறும் மக்கள்: இஸ்ரேலின் வான்வழி தாக்குதலால் 110 பேர் பரிதாப பலி.., 100 பேர் படுகாயம்.!
இர்பான் பதான் பேட்டி: இந்நிலையில், மும்பை அணி நிர்வாகத்தின் முடிவு குறித்தும், தோனி தொடர்பான கேள்விகளுக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்து பகிர்ந்துகொண்டார். இது தொடர்பான பேட்டியில், "சென்னை அணிக்கு தோனி எப்படியோ, அதுபோலவே மும்பை அணிக்கு ரோஹித்.
ரோஹித்-க்கு புகழாரம்: மும்பை அணியை வழிநடத்திய ரோஹித் சர்மா சிறந்த விளையாட்டு வீரர், கேப்டன் ஆவார். அவர் தனது அணியை எப்போதும் திறம்பட வழிநடத்துவார். அதற்கு சாட்சியாக அணியை வழிநடத்த தொடங்கிய 2 ஆண்டுகளில் ஐபிஎல் கோப்பையை பெற்றுக்கொடுத்தார். 2015, 2017, 2019, 2020ம் ஆண்டுகள் என 4 முறை அணிக்கு வெற்றிக்கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளார். அதுவே அவரின் திறமைக்கான சாட்சி. Modi Government Covid Advisory: மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்.!
சோதனையின் பிடியில் எச். பாண்டியா: ஹர்திக் அணியை வழிநடத்த வேண்டும், அவருக்கும் அது சார்ந்த கூடுதல் அனுபவங்கள் வேண்டும். அவர் தனது பொறுப்பை திறம்பட மேற்கொள்வர் என்பதாலேயே அவரின் தலைமையில் அணியை வழிநடத்த நிர்வாகம் முடிவு செய்திருக்கும். சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரோஹித் சர்மா ஆகியோர் மும்பை அணியில் தொடர்ந்து இடம்பெற்று இருக்கின்றனர். இது ஹர்திக்குக்கு எளிதான காரியமாக இருக்காது" என தெரிவித்தார்.