டிசம்பர், 11: முருங்கை (Drumstick) கீரையில் உள்ள இரும்பு சத்து, நமது உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. கண்கள், எலும்புகள் என உடலின் ஒவ்வொரு பாகத்திற்கும் தேவையான பல சத்துக்களை முருங்கை கீரை வழங்குகிறது.
இதனை பலர் விரும்பி சாப்பிட்டாலும், சில குழந்தைகள் சாப்பிட அடம் செய்யும். அவர்களுக்கு முருங்கை துவையல் செய்து கொடுக்கலாம். இன்று முருங்கை துவையல் (Murungai Thuvaiyal) செய்யும் முறை குறித்து காணலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை கீரை (துளிராக இருந்தால் நல்லது) - 2 கப்,
உளுந்தம்பருப்பு - 2 கப்,
மிளகாய் - 4,
புளி - சிறிதளவு,
வெங்காயம் - 2,
உப்பு - தேவையான அளவு,
பூண்டு - 10 பற்கள்,
கறிவேப்பில்லை - சிறிதளவு.
செய்முறை:
- முதலில் எடுத்துக்கொண்ட முருங்கை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பின் வெங்காயத்தை சிறிதாக நறுக்க வேண்டும். அடுப்பில் வாணெலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அது சூடேறியதும் காய்ந்த மிளகாய், உளுந்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். Easy Cooking: சமையல் வேலையை நிமிடத்தில் முடிக்க களமிறக்கப்பட்ட அசத்தல் இயந்திரங்கள் என்னென்ன?.. இல்லத்தரசிகளே தெரிஞ்சுக்கோங்க.!
- பின்னர், பூண்டு, வெங்காயம் மற்றும் முருங்கை கீரையை சேர்த்து வதக்க வேண்டும். முருங்கை கீரை நன்கு வதங்கியதும் உப்பு மற்றும் புளியை சேர்த்துக்கொள்ளவும்.
- இவை தயாரானதும் ஆட்டு உரலில் அல்லது மிக்சியில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து முருங்கை கீரையை அரைத்து எடுத்தால் முருங்கை கீரை துவையல் தயார். இதனை தாளித்து சாப்பிட வேண்டும்.
- இந்த முருங்கை கீரை துவையலை சாதம், தோசை, இட்லி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.