Private Job Alert (Photo Credit: @TNDIPR X)

நவம்பர் 23, ஊட்டி (Nilgiris News): மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில், நீலகிரி மாவட்டத்தில் 23.11.2024 (இன்று) சனிக்கிழமை காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, கேத்தியில் உள்ள சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

சிறப்பு அம்சங்கள்:

இந்த முகாமின் சிறப்பு அம்சங்களாக 100 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வாயிலாக, 10,000 க்கும் அதிகமான பணியிடங்கள் தமிழக அளவில் நிரப்படவுள்ளன. நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் நிறுவனங்களில் இதனால் வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதலும் வழங்கப்படும். இலவசமாக திறன் மேம்பாடு பயிற்சிக்கான பதிவுகளும் வழங்கப்படும். Namakkal Accident: தனியார் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. 3 பேர் பலி.. நாமக்கல்லில் சோகம்.! 

கல்வித்தகுதி:

குறைந்தபட்சம் 8ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளோமா, நர்சிங், பார்மசி, பொறியியல் உட்பட துறைகளில் பயின்றோர் நேர்காணலில் பங்கேற்று வேலைவாய்ப்புகளை பெறலாம். உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். வேலை உறுதி செய்யப்பட்டால், அங்கேயே வேலைக்கான அழைப்புச் சான்றிதழும் வழங்கப்படும்.

கூடுதல் விபரங்களுக்கு நீலகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை 0423 2444004 / 72000 19666 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவலை தெரிந்துகொள்ளலாம். இணையவழியில் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம்.