நவம்பர் 22, தலைமை செயலகம் (Chennai News): தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு அதனை ஊக்குவிக்கும் வகையில் 'நான் முதல்வன்' என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 12-ம் வகுப்பு தேர்வுக்கு செல்லாமல் தோல்வியுற்ற அல்லது தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருக்கும் மாணவ, மாணவிகளுக்காக நான் முதல்வன் திட்டத்தில் உயர்வுக்கு படி-2024 என்ற திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்படுகிறது. அதன் கீழ் இப்போது விருந்தோம்பல் பணிக்கு (Hospitality Associate Programme) அழைப்பு விடுத்துள்ளனர். இதற்கு அவர்களே 3 மாத காலம் வகுப்பும் எடுக்கின்றனர். Astrology: 2025 ஆம் ஆண்டு பரணி நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
வயது வரம்பு: 18-25 ஆண்டுகள்
பாலினம்: அனைவரும்
தேர்வு செயல்முறை: நேர்காணல் மற்றும் மதிப்பீடு
தகுதி: மேல்நிலை மற்றும் அதற்கு மேல் (தேர்ச்சி அல்லது தோல்வி)
திறன்: உணவு உற்பத்தி, உணவு மற்றும் பான சேவை, வீட்டு பராமரிப்பு, ஹோட்டல் தொழில்துறையில் முன் அலுவலகத் துறைகள்.
இன்டர்ன்ஷிப் & வேலைவாய்ப்புகள்: விருந்தோம்பல் நிறுவனங்களுடன் வேலை வாய்ப்பு வாய்ப்புகள்
சம்பளம்: 14,000/- வரை (P.F & ESI மூலம்)
தொழில் தேவைகள்: அடிப்படை ஆங்கில தொடர்பு திறன், வேலை செய்ய நேர்மறை மனப்பான்மை.
தங்குமிடம்: TNSDC ஆல் வழங்கப்படும்
பயிற்சி மையம்: 120, Sir Thyagaraya Road, T. Nagar, Chennai - 600017.
'நான் முதல்வன்' என்ற முதலமைச்சரின் கனவுத் திட்டம்:
Hospitality Associate Programme@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @naan_mudhalvan#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/NmqcAnewxh
— TN DIPR (@TNDIPRNEWS) November 21, 2024