PM Narendra Modi (Photo Credit: @ANI X)

நவம்பர் 23, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டப்பேரவை (Maharashtra Assembly Poll Results 2024) தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்ற நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அங்கு ஆளும் பாஜக, சிவசேனா கூட்டணிக்கும், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது.

ஜார்கண்டிலும் (Jharkhand Assembly Poll Results 2024) கடும் போட்டி:

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிக்கு 2 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இன்று ஒரேகட்டமாக தேர்தல் முடிவுகள் வெளியாகிறது. அங்கு ஆளும் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் இடையே போட்டி நிலவிக்கிறது. MH JH Exit Polls: மகாராஷ்டிரா, ஜார்கண்ட் தேர்தல்.. வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு சொல்வது என்ன?! 

கருத்துக்கணிப்புகள் (Exit Poll) பாஜகவுக்கு சாதகம்:

கருத்துக்கணிப்புகள்படி இரண்டு மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என தகவல் வெளியான நிலையில், முடிவுகள் இன்று மாலைக்குள் தெரிந்துவிடும் என்பதால், இரண்டு மாநில தேர்தலையும் இந்தியாவே உற்றுநோக்கி வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் பலத்த பாதுகாப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வயநாட்டில் (Wayanad) பிரியங்கா முன்னிலை:

அதேபோல, கேரளாவின் வயநாடு உட்பட பல தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்த நிலையில், அதன் முடிவுகளும் இன்று வெளியாகிறது. வயநாடு தொகுதியை பொறுத்தமட்டில் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டார். அவரே வெற்றிபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜகவே முன்னிலை:

மராட்டியம், ஜார்கண்ட் மாநிலத்தை பொறுத்தவரையில் காலை 08:30 நிலவரப்படி பாஜக முன்னணியில் இருக்கிறது. 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தபால் வாக்குகள் அடிப்படியில் பாஜக முன்னிலையில் இருக்கிறது. மராட்டியத்தில் பாஜக கூட்டணி 64 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது. ஜார்கண்டில் பாஜக 25 தொகுதியிலும், காங்கிரஸ் கூட்டணி 15 தொகுதியிலும் முன்னிலையில் இருக்கிறது.

பாஜக தலைமை அலுவலகத்தில் ஜிலேபி தயாரிக்கும் காட்சிகள்:

மராட்டிய மாநில தேர்தல் முடிவுகள் 2024, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவலர் விளக்கம்: