Agriculture Fields | MRK PanneerSelvam (Photo Credit: @MRKPanneer / @Agric_young X)

நவம்பர் 23, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில்‌ வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால்‌ முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கனமழையால்‌ ஏற்படும்‌ பாதிப்பை வட்டாரம்‌, மாவட்டம்‌ மற்றும்‌ மாநில அளவில்‌ கண்காணித்திட குழு அமைக்கப்பட்டு பயிர்சேத நிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது.இப்பருவத்திற்கு, டெல்டா மாவட்டங்களுக்கு தேவையான உரங்களான யூரியா 53,366 மெட்ரிக்‌ டன்‌, டிஏபி 9181, பொட்டாஸ்‌ 14,196 மற்றும்‌ காம்ப்ளக்ஸ்‌ 24,483 மெட்ரிக்‌ டன்‌ இருப்பில்‌ உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

வடகிழக்கு பருவமழையின்‌ காரணமாக வயல்களில்‌ நீர்‌ தேங்கும்பட்‌சத்தில்‌, நீரை வெளியேற்றுவதற்கு ஏதுவாக 21 எண்கள்‌ நீர்‌ இறைக்கும்‌ கருவிகள்‌ மேலும்‌, 805 விசையிலான மரம்‌ அறுக்கும்‌ கருவிகள்‌, மண்‌ அள்ளும்‌ இயந்திரங்கள்‌ மற்றும்‌ 85 மண்‌ தள்ளும்‌ இயந்திரங்கள்‌ வேளாண்மை பொறியியல்‌ துறை மூலம்‌ தயார்‌ நிலையில்‌ வைக்கப்பட்டுள்ளது. மேலும்‌, வடகிழக்கு பருவமழையின்‌ போது கீழ்க்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள்‌ பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 4-Year-Old Child Girl Dies: அங்கன்வாடிக்கு சென்று வந்த சிறுமி திடீர் மரணம்.. பெற்றோர், உறவினர்கள் கண்ணீர்.! 

மேலும்‌ வெள்ள சூழ்நிலையில்‌ நெற்பயிருக்கான மேலாண்மை நடவடிக்கைகள்‌ பின்வருமாறு.,

1. மழைநீர்‌ தேங்கும்பட்‌சத்தில்‌ வயல்களில்‌ உடனடியாக வடிகால்‌ வசதி ஏற்படுத்தி நீரினை வடித்து, வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம்‌ கிடைக்கச்‌ செய்தல்‌ வேண்டும்‌.

2. மழைக்காலங்களில்‌ உரம்‌ இடுதல்‌, பூச்சி மருந்து தெளித்தல்‌, களைக்கொள்ளி இடுதல்‌ போன்றவற்றை தவிர்த்திட வேண்டும்‌.

3. போதிய சூரிய வெளிச்சம்‌ தென்பட்டவுடன்‌, ஏக்கருக்கு 2 கிலோ பயூரியாவுடன்‌, 1 கிலோ ஜிங்க்‌ சல்பேட்‌ உரங்களை 200 லிட்டர்‌ தண்ணீரில்‌ கரைத்து கைத்தெளிப்பான்‌ மூலம்‌ இலை வழி உரமாக தெளித்தல்‌ வேண்டும்‌.

4. தூர்‌ வெடிக்கும்‌ பருவத்தில்‌ ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட வாய்ப்புள்ளது. (இதனை நிவர்த்தி செய்ய மழை நின்று, நீர்‌ வடிந்த பிறகு ஏக்கருக்கு 22 கிலோ யூரியா, 18 கிலோ ஜிப்சம்‌ இவற்றுடன்‌ 4 கிலோ வேப்பம்‌ புண்ணாக்கு கலந்து, ஒரு இரவு முழுவதும்‌ வைத்து 17 கிலோ பொட்டாசியத்துடன்‌ கலந்து வயலில்‌ இடுதல்‌ வேண்டும்‌.

5. மழைக்காலத்தில்‌ புகையான்‌ பூச்சி தாக்குதல்‌ பொருளாதார சேத நிலைக்கு மேல்‌ செல்லும்‌ பொழுது வேம்பு சார்ந்த பூச்சி மருந்தாகிய அசாடிராக்டின்‌- 0.03% மருந்தினை வேளாண்‌ துறையின்‌ பரிந்துரையின்படி உபயோகப்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்‌டுள்ளது.

சம்பா பருவத்திற்கான பயிர்‌ காப்பீடு செய்திட 30.11.2024 அன்று கடைசி நாள்‌ என்பதால்‌, விவசாயிகள்‌ உடனடியாக பதிவு செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌.