மார்ச் 09, சென்னை (Health Tips): மீன்களை வழக்கமாக சாப்பிடுவது பல ஆரோக்கியமான நன்மைகளை நமக்கு அளிக்கிறது. சில மீன்கள் நச்சுத்தன்மை கொண்டவை. அதில், பாதரசம் அதிகமாக உள்ளது. அவ்வகை மீன்களை சாப்பிடுவது நம் உடல்நலத்திற்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். A Mason Suicide By Hanging: 33 வயதாகியும் திருமணமாகலயே – விரக்தியில் நேர்ந்த சோகம்..!
மீன்களை வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு வாரத்திற்கு ஒருமுறை சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். வீட்டில் பெரும்பாலும் அசைவம் சாப்பிடுவோர் வாரத்தில் ஒரு முறை மீன் எடுத்து சமைத்து சாப்பிடுவர். இவ்வாறு மீன்களை அதிகம் சாப்பிடவும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மீன் ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் என்றாலும், சில வகை மீன்களை கர்ப்பிணிகள், பாலூட்டும் பெண்கள் மற்றும் தாய்மை அடைய விரும்பும் பெண்கள் மீதில் மெர்குரி கொண்ட மீன்களை சாப்பிடவே கூடாது. அவ்வகை மீன்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேளி மீன்: பெரும்பாலும் பெரிய அளவிலான தேளி மீன்களை வாங்குவதை தவிர்த்து, சிறிய அளவிலான தேளி மீன்களை வாங்க வேண்டும். ஏனெனில்,சில நேரங்களில் மீன் பண்ணையாளர்கள் மீனின் அளவை பெரிதாக்க பல்வேறு ஹார்மோன்களை மீனின் உடலில் செலுத்துகிறார்கள். இதன் மூலம் அதனை உட்கொள்ளும் அனைவருக்கும் தீங்கு விளைவிக்கும்.
கானாங்கெளுத்தி: பலர் விரும்பி சாப்பிடும் மீனாகும். இதில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், இதனை சாப்பிடுவர்களுக்கு அந்த பாதரசம் அவர்கள் வயிற்றில் குவிந்து கொண்டே இருக்கும். இது பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமையும். இனிமேல் தவிர்ப்பது நல்லது.
சூரை மீன்: அடிப்படையில் இது ஒரு வெளிநாட்டு மீன். இந்த சூரை மீன்களிலும் அதிகமான பாதரசம் இருப்பதால், இது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
மத்தி மீன்: ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் அதிகம் உள்ள மீன் என்றால் அது மத்தி மீன்தான். கண் ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆனால், அதிகளவு பாதரசம் இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிகளவு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
கெளுத்தி மீன்: பொதுவாக கெளுத்தி மீன்களை பண்ணைகளில் வளர்ப்பர். அதில் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதால், புற்றுநோய் அபாயம் உள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. எனவே, இயற்கையான முறையில் வளர்க்கப்படும் மீன்களை பார்த்து வாங்க வேண்டும்.
பாஸா மீன்: வியட்நாமில் இருந்து அதிகமாக இருக்குமதி செய்யப்படுகிறது. அதிகளவு தீங்கு விளைவிக்கும் கொழுப்பு நிறைந்த மீனாகும். கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். மேலும், இதய நோய் மற்றும் அது தொடர்பான மற்ற நோய்களை ஏற்படுத்தும். இதனை பிராய்லர் மீன் எனவும் அழைக்கின்றனர்.
புதிய மீன்களை பார்த்து வாங்கி சாப்பிட வேண்டும். மேலும், மீனின் தோல் லேசானதாகவும், கண்கள் தெளிவாகவும் இருக்கும். துடுப்புகள் வலுவாகவும், செதில்கள் சிவப்பு நிறத்தில் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு, மீன்களை நன்கு பார்த்து வாங்க வேண்டும்.