School College Holiday (Photo Credit: @TimesofIndia X)

டிசம்பர் 03, நுங்கம்பாக்கம் (Chennai News): ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால், தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், இன்று (Today Weather) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 15 மாவட்டங்களில் கனமழை:

அதன்படி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர். திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. Medical College Student Dies: பரோட்டா சாப்பிட்ட மருத்துவக் கல்லூரி மாணவி; தூக்கத்தில் பிரிந்த உயிர்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த 3 மணிநேரத்திற்கு மழை:

அதேநேரத்தில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு, இன்று காலை 10 மணிவரையில் மழைக்கான அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நீலகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி, ஊத்தங்கரை வட்டத்தில் செயல்படும் பள்ளிகளுக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவக்கோவிலூர் நகராட்சி பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.