டிசம்பர் 04, டெல்லி (Special Day): 1612ல் கிழக்கிந்திய நிறுவனத்தால் நிறுவப்பட்டது. இந்திய கடற்படையானது உலகின் 5வது பெரிய கடற்படையாகும். 1971ம் ஆண்டு டிசம்பர் 4 அன்று பாகிஸ்தான் இந்திய விமானப்படையைத் தாக்கியது. அதற்காக பதிலடியாக இந்திய கடற்படை டிரைடென்ட் என்ற ஆப்ரேஷன் மூலம் பாகிஸ்தானின் காரச்சியில் உள்ள கடற்படை தலைமையகத்தை தாக்கி அழித்தது. இதில் மூன்று பாகிஸ்தானின் போர்க்கப்பலை மூழ்கடித்தது. அந்த போரில் இந்தியா வெற்றியும் பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகவும், போரில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் விதமாகவும் நாடு முழுவதும் இந்நாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. World Disability Day 2024: உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் என்னென்ன?!
இந்திய கடற்படை நம் நாட்டின் கடல் எல்லைகளையும் வர்த்தக பாதைகளையும் பாதுகாக்கிறது. மேலும் கரையோர பகுதிகளுக்கு பேரிடர் காலங்களில் உதவிகளையும் செய்து வருகிறது. இந்திய கப்பற்படை மூன்று மண்டலங்களை கொண்டுள்ளது. மேற்கு மண்டலப் பிரிவின் தலைமையகம் மும்பையிலும் கிழக்கில் விசாகப்பட்டனத்திலும் தெற்கில் கொச்சியிலும் உள்ளது. மூன்று மண்டலத்திற்கு கீழும் 66 கடற்படைத் தளங்கள் உள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபாருக்கு தனியாக கப்பற்படைதளம் அமைக்கப்பட்டுள்ளது. 2022 நிலவரப்படி, விமானம் தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி போர் கப்பல்கள் உட்பட 41க்கும் அதிகமான கப்பல்கள் உள்ளன. எதிர்காலத்தில் 2050 ம் ஆண்டுக்குள் 200 கப்பல்கள், 500 விமானங்கள் கொண்ட சக்திமிக்க கடற்படையை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது.