டிசம்பர் 03, புதுடெல்லி (New Delhi): ஆயிரம் இரவுகள் வாழ்க்கையில் வந்தாலும், இதுதானே அவர்களுக்கு முதலிரவு! ஒரு பக்கம் எதிர்ப்பார்ப்புகளும் உள்ளக் கிளர்ச்சியும், மறுபக்கம் அச்சமும் படபடப்பும். முதலிரவுக்கு முன்பாக பெரும்பாலான புதுமணத் தம்பதிகளின் நிலை இதுதான்.
உங்களின் எல்லா மனத்தடைகளையும், அச்சங்களையும் ஒரே நாளில் விட்டுவிட முடியாதுதான். ஆனால், ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயற்சிக்கும் செயலைத் தொடங்க சிறந்த நேரம் முதலிரவு. இது உடலுறவுக்கான இரவு மட்டுமல்ல, மனம்விட்டுப் பேசுவதற்கான இரவும்தான். திருமண நாள் நிகழ்வுகளை, அன்று நடந்த கலாட்டாக்களை, நகைச்சுவை தருணங்களை, சுவையான அம்சங்களை, ஏன் எரிச்சலூட்டிய சம்பவங்களையும் கூட இருவரும் பகிர்ந்துகொள்ளலாம்., சிரித்து மகிழலாம். இனி வரப்போகும் ஆயிரமாயிரம் இன்பமான இரவுகளுக்கு இந்த முதலிரவு அச்சாரமாக இருக்கட்டும். தேவையற்ற அச்சங்கள் அகன்று, பரஸ்பரம் புரிதலும், அன்பும் காதலும் மேலோங்கியிருக்கும் உறவில் ஒவ்வொரு இரவும் முதலிரவே! Astrology: 2025 ஆம் ஆண்டு பூசம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
இன்பமான தாம்பத்ய வாழ்க்கைக்கான விதிகள்:
- ஒருவரை ஒருவர் 'சமமானவர்' ஆக மதியுங்கள். எந்த ஒரு உறவுக்கும் இதுவே ஆதாரம்.
- எப்போதுமே மற்றவரின் சம்மதம் பெறுதல் அவசியம். சம்மதமின்றி நிகழும் உறவு, எதிர்விளைவையே அளிக்கும்.
- சம்மதம் பெற, துணைவருக்கு நேரடியான அல்லது மறைமுகமான வற்புறுத்தல் / அழுத்தம் அளிக்கக்கூடாது.
- நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள், எதைச் செய்ய விரும்பவில்லை என்பதைப் பற்றிய பரஸ்பர தகவல் பரிமாற்றத்தில் மிகவும் தெளிவாக இருங்கள்.
- ஒருவர் மற்றவரின் இன்பங்கள் குறித்து விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
- உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் எவ்விதத்திலும் மற்றவர் காயப்படாமல் பார்த்துக்கொள்வதும் பாதுகாப்பதும் ஒவ்வொருவரின் கடமை.
- விருப்பமில்லாத கர்ப்பம், உடலுறவு மூலம் பரவக்கூடிய நோய்கள், இவை குறித்து போதுமான பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
- ஒருவர் மற்றவரின் எல்லைகளை மதித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- பரஸ்பரம் ஈடுபாட்டுடன், உண்மையாகவும் நேர்மையாகவும் இருங்கள்.
- உங்கள் செயலுக்கான விளைவுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள்.