Devendra Fadnavis (Photo Credit: @ians_india X)

டிசம்பர் 04, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 10 நாட்களை கடந்தும் அம்மாநில புதிய முதலமைச்சர் யார் என்கிற கேள்விக்கு தெளிவான விடை கிடைக்காமல் இருந்தது. ஏக்நாத் ஷிண்டேவை அங்கீகரித்து அவருக்கே முதல்வர் பதவி தர வேண்டும் என்பது சிவசேனாவின் கோரிக்கை. ஆனால் பாஜக இதனை நிராகரித்தது. இந்த நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. Telangana Earthquake: தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு..!

இக்கூட்டத்தில், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராகவும், முதலமைச்சராகவும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவிற்கும், அஜித் பவாருக்கும் துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில், தேவேந்திர பட்னாவிஸ் (Devendra Fadnavis) மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பதவியேற்பார்‌. விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 தொகுதிகளில் வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.