Bigg Boss Tamil Season 8 Promo (Photo Credit: YouTube)

டிசம்பர் 03, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil Season 8) நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது, 18 போட்டியாளர்களோடு தொடங்கப்பட்டடு, தற்போது 47 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. முதல் வாரத்தில் ரவீந்தர், இரண்டாவது வாரத்தில் அர்னவ், மூன்றாவது வாரத்தில் தர்ஷா குப்தா, ஐந்தாவது வாரத்தில் சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். பிக் பாஸ் வீட்டில் தற்போது ஆனந்தி, அன்ஷிதா, தீபக், ஜாக்குலின், ஜெப்ரி, மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சௌந்தர்யா, தர்ஷிகா, வர்ஷினி, விஷால் ஆகியோர் இருக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிவக்குமார் என்பவர் எலிமினேட் செய்யப்பட்டார். ஆனால் பல இணையதளங்களில் ஓட்டுக்களில் சாச்சனாவே குறைவான வாக்குகளை பெற்று இருந்தார். இதனால் கடைசி இடத்தில் இருந்த சாச்சனாவை விஜய் சேதுபதி காப்பாற்றிவிட்டார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மகாராஜா படத்தில் தனது மகளாக நடித்த சாச்சனாவை பிக் பாஸ் ஷோவிலும் மகள் என விஜய் சேதுபதி கூறி வருவது குறிப்பிடத்தக்கது. Arun Vijay Salary: தனுஷிற்கு வில்லனாகும் அருண் விஜய்.. கோடியில் புரளும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா?!

இந்நிலையில் இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் ஜாக்குலின் கூறியிருப்பதாவது, நான் என்ன கேட்கிறேன். எனக்கு சாம்பார் பிடிக்காது. எனக்கு பருப்பு தனியாக கொடுத்துவடுவீங்களா?. நான் பாலை தனியா வாங்கி பருப்பு பாயாசம் செய்து குடிச்சுக்கவானு கேட்குறேன் என்றார். அதற்கு மஞ்சரியோ, நான் மாக் பண்ணல சரியா என்றார். அதை கேட்ட ஜாக்குலினோ, இந்த வீட்டில் இருக்கும் எல்லோரும் உங்களை மாக் பண்ணத் தான் வந்திருக்காங்களா என ஒரே போடாக போட்டார். நீங்க தாங்க உங்க தலையை எல்லாதுலயும் விடுறீங்க என்றார் சவுண்டு. அப்படியே ஜாலியா பேசுற மாதிரி என்ன வேண்டுமானாலும் பேசிவிட்டு போகாத சவுந்தர்யா என கடுப்பாகி கத்தினார் மஞ்சரி. என்கிட்டயே சவுண்டு விடுறீங்களானு சவுந்தர்யா பதிலுக்கு சவுண்டுவிட்டார். நாங்க எங்களுக்குள்ள பேசிக்குவோம்ங்க. அப்படியே சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே வரீங்க, எதுக்கு வரீங்கனு கேட்டார் சவுந்தர்யா. நல்லா இருக்கு பண்ணுனு இடத்தை காலி செய்தார் மஞ்சரி. நீங்க பண்றது ரொம்ப நல்லா இருக்கு போங்க என சவுண்டு விட்டார் சவுந்தர்யா.

இன்றைய நாளின் பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ: