டிசம்பர் 04, சென்னை (Astrology Tips): சிம்ம ராசியில் இருக்கும் மகம் (Magham) நட்சத்திரக்காரர்களே, இந்த 2024 ஆம் ஆண்டு கோச்சாரப்படி உங்களுக்கு ஒரு மிகச் சிறப்பான ஆண்டாகவே இருந்திருக்கும். நல்ல வேலை வாய்ப்பு, தொழில் முன்னேற்றம், பண வருவாய், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை, திடீர் அதிர்ஷ்டங்கள் கூட ஏற்பட்டிருக்கலாம். இந்த ஒரு நல்ல அமைப்பு வரும் மாசி மாதம் வரை உங்களுக்கு கிடைக்கும். அதே நேரத்தில் தற்போது புதிய பண நெருக்கடி ஏற்பட்டு இருக்கலாம் அல்லது ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கணவன் மனைவி ஒற்றுமை, கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமணம் முடியாதவர்களுக்கு இந்த 2024 இல் திருமணம் நடந்திருக்கும் அல்லது திருமண வயதில் உள்ளவர்கள் வரும் மார்ச் மாதத்திற்குள் திருமணத்தை முடித்து விடவும். அப்படி இல்லை என்றால் இன்னும் ஓராண்டு தள்ளிப் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. குழந்தை இல்லாதவர்களுக்கு இந்த ஆண்டு குழந்தை ஜனித்திருக்க வாய்ப்பு இருக்கிறது.
புதிய தொழில் நீங்கள் ஆரம்பித்து இருந்தாலும் அவை நல்லவிதமாக நடைபெறும். ஷேர் மார்க்கெட்டில் நல்ல லாபம் பார்ப்பதற்கு உங்களுக்கு யோகம் இருக்கிறது. இன்னும் எட்டு மாதங்களுக்கு கடன் கொடுக்கல் வாங்கலில் இழுபறி நீடிக்கும். கொடுத்த கடன் உடனடியாக திரும்ப வராது. ஆதலால் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும் எட்டு மாதங்களுக்கு. வரும் சித்திரை மாதம் முதல் எதிலும் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். கணவன் மனைவி இடையே பிரச்சனை, தொழிலில் போட்டி, கூட்டாளிகளிடையே மனக்கசப்பு, நண்பர்களிடையே பிரச்சனை, நண்பர்களால் தொல்லை, பண நெருக்கடி மற்றும் நோய் பாதிப்பு, வம்பு வழக்குகள் போன்றவை உங்களை தேடி வர வாய்ப்பு இருக்கிறது. ஆதலால் வரும் சித்திரை மாதம் முதல் எதிலும் கவனமாக இருக்க வேண்டும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக தேர்வு எழுதி விடுவீர்கள். அடுத்த ஆண்டில் மிகவும் கவனமாகவும் கடினமாகவும் உழைக்க வேண்டியிருக்கும்.
அரசு அதிகாரிகளுக்கு இந்த ஆண்டு நல்ல வருமானம், பதவி உயர்வு, தேவையான இடத்திற்கு இடம் மாற்றம் கிடைக்க யோகம் இருக்கிறது. Astrology: 2025 ஆம் ஆண்டு பூசம் நட்சத்திரகாரர்களுக்கு எப்படி இருக்கும்? விபரம் உள்ளே..!
கலைத்துறையினருக்கு மாசி மாதத்திற்குள் புதிய வாய்ப்புகள் கிடைக்க யோகம் இருக்கிறது. சுயதொழில் செய்பவர்களுக்கு மாசி மாதம் வரை தொழில் வியாபாரம் மிகச் சிறப்பாக நடைபெறும். அது உங்கள் ஜாதகத்தையும் பொறுத்தது. பெண்களுக்கு சித்திரை மாதத்திற்கு மேல் உடல் நலனில் கவனம் தேவை. கர்ப்பப்பை பிரச்சனைகள், உடலில் ரத்த குறைவு, நீர் சத்து, உடம்பில் கெட்ட நீர் சேர்வது போன்ற பிரச்சனைகளால் உடல் நலம் பாதிக்கப்படலாம். கணவன் மனைவியிடையே சித்திரை மாதத்திற்கு மேல் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இப்போது இருந்தே எந்த ஒரு கருத்தையும் அனாவசியமாக யாரிடமும் கூற வேண்டாம். பிறரை பற்றி பிறரிடம் குறை கூற வேண்டாம். நிச்சயம் அது அவர்களுக்கே சென்று, உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
வாக்கிலே சனி என்று கூறுவதைப் போல உங்கள் வாக்கால் நீங்கள் துன்பப்பட நேரிடலாம். அதனால் நீங்கள் பேசும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஜாதக ரீதியாக திசை புத்திகள் நன்றாக இருந்தால் சித்திரை மாதத்திற்கு மேலும் ஓரளவு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். ஜாதகம் சரியில்லை என்றால் கெடுபலன்கள் அதிகரிக்கும். உங்களிடம் பொறாமை குணம் இருந்தால் அவற்றை தவிர்க்க வேண்டும். உங்கள் உடல் சூடானது, வெப்பமானது. ஆதலால் உங்கள் உடலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். சபல புத்தி இருந்தால் அதை கட்டுப்படுத்த வேண்டும். பிறருக்கு தான தர்மங்கள், அனாதை குழந்தைகளுக்கு, முதியோர் இல்லங்களுக்கு சென்று தான தர்மங்கள் செய்து வருவதன் மூலம் உங்கள் கெடுபலன்களை குறைக்கலாம்
பரிகாரம்: மகம் நட்சத்திர காரர்கள், முன்னோர்கள் வழிபாடு, குலதெய்வ வழிபாடு, சித்தர் வழிபாடு, ஜீவசமாதி களுக்கு சென்று வழிபாடு செய்து வருவதன் மூலம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். கெடு பலன்கள் வெகுவாக குறையும். பொதுவாக மகம் நட்சத்திரக்காரர்களுக்கு தாய் வழியில் பிரச்சனை இருக்கும். தாயின் உடல் நலக்குறைவு, தாய் வழி செலவினங்கள், பிரச்சனைகள் ஏற்படும். அவர்கள் முன்னோர்களுக்கு ஒழுங்காக திதி கொடுத்து வர வேண்டும். உங்கள் வீட்டில் பெண் தெய்வங்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. முன்னோர்களை வழிபட்டு அம்மாவாசைக்கு விரதம் இருந்து திதி கொடுத்து வந்தால் உங்கள் கெடு பலன்கள் வெகுவாக குறையும். முன்னோர் வழிபாடு முன்னேற்றம் தரும் சித்தர்கள் வழிபாடு சிறப்பான வாழ்வை தரும்.
மார்ச் வரை உங்கள் மதிப்பெண் 80. மார்ச் மேல் உங்கள் மதிப்பெண் 50.
இது கோச்சார ரீதியான பலன் மட்டுமே.