Malaysia Flood (Photo Credit: @ai_daytrading X)

டிசம்பர் 04, கோலாலம்பூர் (World News): மலேசியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மலேசியாவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 6 மாதங்களில் பெய்த மழையை விட கடந்த 5 நாட்களில் அதிகளவு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இந்த தொடர் கனமழை காரணமாக மலேசியாவின் கிளந்தான், திரங்கானு உள்ளிட்ட மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு (Flood) ஏற்பட்டுள்ளது. இதனால் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கும் மக்களை மீட்பு படையினர் படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர். Israel Hamas War: இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர் நிறுத்த உடன்பாட்டை மீறிய ஹிஸ்புல்லா.. தீவிரமாகும் போர்.!

மேலும், சாலைகளில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரிசெய்ய சுமார் ஒரு பில்லியன் ரிங்கிட் (224 மில்லியன் டாலர்) செலவாகும் என மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் தெரிவித்தார். இதேபோல், தெற்கு தாய்லாந்தில் வெளுத்து வாங்கிய கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தில் (Thailand) மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மழைப்பொழிவு சற்று குறைந்துள்ள நிலையில், பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகிறது. இதனிடையே, சில பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அங்கு கனமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

மலேசியாவில் வெள்ளப்பெருக்கு: