டிசம்பர், 10: உலகம் (World) அழகிய கண்டங்களால் எழில் பெற்று, நாடுகளாக பிரிக்கப்பட்டு வளப்படுத்தப்டுகிறது. அந்தந்த நாடுகளின் சார்பில் தங்களது நாட்டின் இயற்கை (Natural Resources) வளங்களை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சில நாடுகளில் இயற்கையாக எழில் கொஞ்சும் அழகு இருக்கின்றன. அவ்வாறான இயற்கை அம்சங்கள் கொண்ட அழகிய நாடுகள் குறித்து இன்று காணலாம்.
இத்தாலி (Italy): இத்தாலி உலகின் அழகிய நாடுகளில் ஒன்றாகும். உலகில் வேறெந்த நாடுகளிலும் காண இயலாத அளவிலான கலாச்சார பொக்கிஷம், இயற்கை காட்சிகளை வெளிப்படுத்தும். அதேபோல, மாறுபட்ட கட்டிடக்கலை, மலைகள், திராட்சை தோட்டம், பனிமலை உச்சிகள் காண்போரை மயங்கவைக்கும்.
சுவிட்சர்லாந்து (Switzerland): உலக நாடுகளில் திரும்பும் இடமெல்லாம் வியப்பை தரும் இயற்கை அழகை கொண்டது சுவிட்சர்லாந்து. சூரிச், ஜெனிவா, மாண்ட்ரூட்ஸ் என ஏரிக்கரை நகரமும், இயற்கை எழில் கொண்ட உயரமான மலைகளும், தெளிவான வனப்பகுதியும் கவனிக்கத்தக்கது. இங்கு ஆண்டுதோறும் உலகளவிலான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர்.
Switzerland
கனடா (Canada): அற்புதங்கள் கொண்ட பள்ளத்தாக்கு, நீளமான ஏரிகள், அழகிய காடுகள், பசுமையான மலைகள் போன்றவற்றை கொண்ட நாடு கனடா. அங்குள்ள 48 தேசிய பூங்காவில் புவியின் அரிதான உயிரினங்கள் இருக்கின்றன. அவற்றை ஆராயவும் அனுமதி வழங்கபடுகிறது. உலகளவில் 60 % ஏரிகளை கொண்ட நாடு கனடா ஆகும். ஒட்டாவா, வான்கூவர், டொராண்டோ நகரங்கள் உலகளவில் கவனிக்கப்படும் ஒன்றாகும். Women Pregnancy: மகளிர்பக்கம்: கர்ப்பகாலத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னென்ன?…!
அயர்லாந்து (Ireland): நமது யதார்த்தமான உலகில் இருந்து விலகி மற்றொரு உலகை காணுவதற்கு அயர்லாந்து சென்று வரலாம். உலகின் அழகான காட்சிகளால் வருணிக்கப்படும் அயர்லாந்து ஈரமான காலநிலைக்கும், பசுமையான வயல்வெளிக்கும் பிரபலமானது ஆகும். அங்குள்ள மலைகள், புல்வெளிகள், மணல் கடற்கரைகள், பாறை கடற்கரைகளும் அங்கு பிரபலமாகும்.
தென்னாபிரிக்கா (South Africa): வனவிலங்கு மற்றும் அது தொடர்பான ஆய்வுகளை சபாரி செய்து ஆராய நாடே இருக்கிறது என்றால் அது தென்னாபிரிக்கா மட்டும் தான். அங்குள்ள க்ரூகர் தேசிய பூங்கா உலகத்தின் 8 பாரம்பரிய தளங்களுடன் அற்புதமான காலநிலையோடு மறக்க முடியாத அனுபவத்தினை வழங்கும். தென்னாப்பிரிக்காவில் உள்ள பல நாடுகளில் சர்ச்சை & சமூக விரோத செயல்கள் நடந்தாலும் அங்குள்ள இயற்கை காணக்காண ஆவலை ஏற்படுத்தும். மேலுள்ள நாடுகளை தவிர்த்து ருமேனியா, கிரீஸ், ஸ்கட்லாந்து, பெரு, ஐஸ்லாந்து, நார்வே போன்ற நாடுகளையும் காணலாம்.