Helicopter Crash in Hudson River in US (Photo Credit: @EmekaGift100 X)

ஏப்ரல் 11, நியூயார்க் (World News): அமெரிக்காவின் நியூயார்க் (New York) நகரில், ஹட்சன் நதி அமைந்துள்ளது. இங்கு, ஸ்பெயினில் உள்ள சீமென்ஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அகஸ்டின் எஸ்கோபர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன், நியூயார்க் நகருக்கு வந்தார். நேற்று (ஏப்ரல் 10) நியூயார்க் நகரில் பெல் 206L-4 லாங்ரேஞ்சர் IV ஹெலிகாப்டரில், மன்ஹாட்டன் நகரைச் சுற்றி குடும்பத்துடன் பயணம் செய்தனர். அப்போது, ஹட்சன் ஆற்றில் (Hudson River) ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. Donald Trump Tariffs: பரஸ்பர வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்; அதிபர் டிரம்ப் திடீர் முடிவு..!

ஹெலிகாப்டர் விபத்து:

ஹெலிகாப்டர் விபத்தில், 3 குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறை அதிகாரிகள் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து முழு விவரம் வெளிவரவில்லை. காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: