CSK VS KKR | IPL 2025 (Photo Credit: @IPL / @Sriramrpckanna1 X)

ஏப்ரல் 11, சேப்பாக்கம் (Cricket News Tamil): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பௌலிங் தேர்வு செய்ததால், சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரச்சின் 9 பந்துகளில் 4 ரன்கள், தேவன் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள், ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 16 ரன்கள், விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள், சிவம் டியூப் 29 பந்துகளில் 31 ரன்கள், ரவிச்சந்திரன் 7 பந்துகளில் 1 ரன்கள், ஜடேஜா & தீபக் ஹூடா 2 பந்துகளில் 0 ரன், தோனி 4 பந்துகளில் 1 ரன்கள், நூர் அகமத் 8 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி திணறித்திணறி 103 ரன்கள் சேர்த்ததது. 104 என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. CSK Vs KKR: அடேங்கப்பா.. இப்படி ஒரு மரண அடியை சிஎஸ்கே நினைச்சே பார்த்திருக்காது.. சொதப்பல் ஆட்டம்.. கொல்கத்தாவுக்கு எளிய இலக்கு.! 

சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

அதனைத்தொடர்ந்து காலமாகிய கொல்கத்தா அணி 9 ஓவரில் மேட்சை முடித்தது. கொல்கத்தாவின் சார்பில் களமிரனாகிய குயின்டன் 16 பந்துகளில் 23 ரன்கள் அடித்து அசத்தினார். சுனில் நரேன் 18 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார். ரஹானே 17 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். ரிங்கு சிங் 13 பந்துகளில் 15 ரன்கள் எடுத்தார். இதன் வாயிலாக கொல்கத்தா அணி 10.1 ஓவரில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. சென்னை அணி தொடர் தோல்வியால் ரசிகர்களை வாட்டி வதைக்கிறது. அதுவும் இன்றைய தோல்வி நடை சீசனில் மெகா மோசமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குயின்டன் டி காக் அசத்தல் பேட்டிங்: