Match 25: CSK Vs KKR | IPL 2025 (Photo Credit: @IPL X)

ஏப்ரல் 11, சென்னை (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டியில், இன்று சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் இருந்து தடுமாறிய சென்னை அணி 20 ஓவர்களில் மொத்தமாக 103 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனால் 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. CSK Vs KKR: சொந்த மண்ணில் வெற்றிக்கனியை எட்டிப்பிடிக்குமா சென்னை? இன்று கொல்கத்தா அணிக்கு எதிராக பலப்பரீட்சை.! 

மெகா சொதப்பல் ஆட்டம்:

சென்னை அணியின் சார்பில் விளையாடியவர்களில் ரச்சின் 9 பந்துகளில் 4 ரன்கள், தேவன் கான்வே 11 பந்துகளில் 12 ரன்கள், ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 16 ரன்கள், விஜய் சங்கர் 21 பந்துகளில் 29 ரன்கள், சிவம் டியூப் 29 பந்துகளில் 31 ரன்கள், ரவிச்சந்திரன் 7 பந்துகளில் 1 ரன்கள், ஜடேஜா & தீபக் ஹூடா 2 பந்துகளில் 0 ரன், தோனி 4 பந்துகளில் 1 ரன்கள், நூர் அகமத் 8 பந்துகளில் 1 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி திணறித்திணறி 103 ரன்கள் சேர்த்ததது. 104 என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது. சீரான ஓவர்கள் இடைவெளியில் விக்கெட்கள் தொடர்ந்து சரிந்தது. வைபவ், மொயீன் அலி ஆகியோர் தலா 1 விக்கெட், ஹர்ஷித் & வருண் 2 விக்கெட், சுனில் நரேன் 3 விக்கெட் கைப்பற்றினர்.

நூர் அகமத் விக்கெட் காலி:

வருண் சக்கரவர்த்தி அசத்தல் பந்துவீச்சு:

கொல்கத்தா அணி டாஸ் வென்று பௌலிங் தேர்வு: