ஏப்ரல் 11, சென்னை (Chennai): தமிழக மக்களின் நம்பிக்கைப்படி, சூரிய நாட்காட்டியில், மேஷ ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாளில் தமிழ் புத்தாண்டு (Tamil Puthandu) தொடங்குகிறது. அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில மாதத்தின் கணக்குப்படி, ஏப்ரல் 14 அன்று சித்திரை மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நன்னாளில் உலகளாவிய தமிழர்களின் வீடுகளில் கொண்டாட்டம் களைகட்டும். தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என பல நாடுகளில் வாழும் தமிழர்களும் தமிழ் புத்தாண்டை தங்களின் மரபுப்படி கொண்டாடி மகிழ்வார்கள்.
தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் 2025 (Tamil New Year Celebration):
தமிழ் புத்தாண்டு நன்னாளில் காலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை உடுத்தலாம். வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு முக்கனிகளான மா, பலா, வாழையில் உணவு சமைத்து பரிமாறி வழிபடலாம். புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக வீட்டை முன்னதாகவே சுத்தம் செய்து வைத்திருப்பது நல்லது. வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் வைத்து, பொங்கல் வைத்தும் வழிபடலாம். நாம் நினைக்கும் காரியங்கள் எதிர்வரும் புத்தாண்டில் நிறைவேற பணிகளை செவ்வனே தொடங்கலாம். உற்றார்-உறவினர்களின் வீட்டுக்கு சென்று தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து மகிழலாம். குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடலாம். ஒவ்வொருவரும் நமது வாழ்க்கையின் எதிர்காலத்துக்காக ஓடிக்கொண்டு இருக்கும்போது, நமது செயல்களுக்கு உறுதுணையாக இருக்கும் குலதெய்வங்கள் கோவிலுக்குச் சென்று குடும்பத்துடன் வழிபட்டு வரலாம். இது புத்தாண்டை இறைவனின் ஆசியுடன் தொடங்க வழிவகை செய்யும். Tamil New Year 2025: தமிழ் புத்தாண்டு 2025.. தேதி என்ன? என்ன செய்யலாம்? விபரம்., வாழ்த்துச் செய்தி இதோ.!
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் (Happy Tamil New Year Wishes):
இன்றளவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு டிஜிட்டல் உலகுக்கேற்ப வாட்சப், பேஸ்புக் போன்றவற்றில் வாழ்த்து செய்திகளும் அதிகம் பகிரப்படுகின்றன. அந்த வகையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்து (Tamil Puthandu Wishes in Tamil) செய்தியை லேட்டஸ்ட்லி தமிழ் உங்களுக்காக பகிர்ந்துகொள்கிறது. இந்த வாழ்த்து செய்தியை நீங்கள் உங்களின் நண்பர்களுக்கும் பகிர்ந்து இனிய தமிழ்ப் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடலாம்.
1. தமிழ் புத்தாண்டில் புதிய இலக்கு, கனவுகள் நெருங்கட்டும், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

2. இதயம் நிறைந்த நன்றி, நல்ல நம்பிக்கையுடன் புத்தாண்டை வரவேற்போம், இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

3. நமது குடும்பத்திற்கு அன்பு, அமைதி, செழிப்பு ஆக்கியவற்றை புத்தாண்டு தரட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

4. மகிழ்ச்சியான, ஆரோக்கியமான, வளமான புத்தாண்டை இன்முகத்துடன் வரவேற்போம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

5. புத்தாண்டின் புதிய தொடக்கத்தை இருகரம் நீட்டி, அன்புடன் வரவேற்போம்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

6. வாழ்வின் சூரிய ஒளியாக இருக்கும் துணையே, தமிழ் புத்தாண்டில் மேலும் நமது நெருக்கத்தை வலுப்படுத்தி, அன்பு, ஆதரவு, புரிதலை வெளிப்படுத்தி, உற்சாகமாக, வெற்றிகரமாக நமது நினைவுகளை உருவாக்குவோம், இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

உலகத்தமிழ் சொந்தங்களுக்கு லேட்டஸ்ட்லி தமிழ்-ம் தனது இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
Tamil New Year 2025 Images & Puthandu Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Varusha Pirappu