Virudhunagar Rattinam Accident Visuals (Photo Credit: @News18Tamilnadu / @TheHinduTamil X)

ஏப்ரல் 12, விருதுநகர் (Virudhunagar News): தமிழ்நாடு முழுவதும் நேற்று பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக சிறப்பிக்கப்பட்டது. இதனால் கோவில் மற்றும் பொதுஇடங்களில் விடுமுறை காலத்தினை முன்னிட்டு தனியார் சார்பில் கண்காட்சி போன்றவற்றுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. கண்காட்சியில் ராட்டினம் போன்ற திரில் பயணத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதனிடையே, "சுனாமி ராட்டினம்" என அழைக்கப்படும் ராட்டினம் பயணத்தில் பெண் படுகாயமடைந்த சோகம் நடந்துள்ளது. AIADMK BJP Alliance: தாமரையுடன் இணைந்த இலை.. கூட்டணி சாத்தியமானது ஏன்? தமிழக அரசியலில் மெகா திருப்பம்.! 

பெண்ணுக்கு நேர்ந்த சோகம்:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொண்ட நபர்கள், சுனாமி ராட்டினத்தில் பயணம் செய்தனர். ராட்டினம் இயங்கும்போதே பெண் ஒருவர் அமர்ந்து இருந்த இருக்கையின் பாதுகாப்பு கம்பிகள் தளர்வடைந்து, அவர் அதில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இந்த விபரீத சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. விபத்தில் படுகாயமடைந்த பெண்மணி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார்.

கவனம் தேவை:

இன்றளவில் திருவிழாக்கள், கண்காட்சி நடக்கும் இடங்களில் ராட்டினங்கள் கொண்டு வரப்படுகின்றன. இவை மக்களின் சில நொடி இன்பத்துக்காக இயக்கப்படுகிறது. அதேவேளையில், ராட்சத அளவிலான ராட்டினங்களை இயக்க அனுமதி கொடுக்கும் அதிகாரிகள், அதனை முறையாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் இவ்வாறான அசம்பாவிதங்கள் நடக்கும் என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பெண் ராட்டினத்தில் இருந்து தவறி விழும் காட்சிகள்: