Good Bad Ugly Sensor as UA (Photo Credit: @MythriOfficial / @TrendsAjith X)

ஏப்ரல் 08, கோடம்பாக்கம் (Cinema News): ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி படத்துக்கு பின்னர் அஜித்துடன் இணைந்துள்ள ஆதிக் ரவிச்சந்திரனின் இப்படைப்பு மார்க் ஆண்டனிக்கு பின்னர் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, சமீபத்தில் படத்தின் ஓஜி சம்பவம், காட் ப்ளஸ் யு பாடல்கள், மிரளவைக்கும் ட்ரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி இருந்தது. Mission: Impossible – The Final Reckoning: மிரட்டல் காட்சிகள்.. வெளியானது மிஷன்: இம்பாசிபில் - தி பைனல் ரெகோனிங் படத்தின் ட்ரைலர்.. லிங்க் உள்ளே.! 

குட் பேட் அக்லி ரிலீஸ் தேதி:

ரூ.250 கோடி செலவில் உருவாகியுள்ள இப்படம், உலகளவில் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகியவற்றிலும் வெளியாகிறது. இதனால் உலகளாவிய சந்தையில் பல நூறுகோடிகளை படம் இலாபமாக குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீடு ஏப்ரல் 10, 2025 அன்று (2 நாட்களில்) என அறிவிக்கப்பட்டு, வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கி தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அவதூறு வார்த்தைகள், சிகிரெட் எச்சரிக்கை வாசகம் உட்பட சில விஷயங்கள் திருத்தப்பட்டு 139 நிமிடங்கள் ஓடும் படமாக குட் பேட் அக்லி நாளை மறுநாள் உலகளவில் வெளியாகிறது.

தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கிய அறிவிப்பு: