ஜனவரி 10, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 96 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Bigg Boss Tamil Season 8: வீட்டின் விதிமுறையை மீறிய ரவீந்தர்; நேரில் அழைத்து கண்டித்த பிக் பாஸ்.!
பிக் பாஸ் வீட்டிற்குள் மோதல்:
பிக் பாஸ் 8 வீட்டிற்கு 8 விருந்தாளிகள் வந்தவுடன், போட்டியாளர்கள் எல்லாம் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். இந்நிலையில் சவுந்தர்யாவும் (Soundarya), ஜாக்குலினும் மோதிக் கொண்ட ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜாக்குலினின் (Jacqueline) கேமும், கேரக்டரும் கலந்து இருக்கிறது என எனக்கு தோன்றுகிறது. அதெல்லாம் எனக்கு செட்டாகாது என விருந்தாளி ரவீந்தரிடம் தெரிவித்தார் சவுந்தர்யா. அதைக் கேட்ட ஜாக்குலின், எனக்கு என்ன தோனுகிறதுனா அவங்களுக்கு நல்லா கேம் ஆடத் தெரிந்திருக்கிறது. எனக்கு அந்த அளவுக்கு தெரியவில்லை. அவங்க கரெக்டான இடத்தில் கரெக்டான விஷயங்களை பதிவு பண்றாங்க. கரெக்டான விஷயங்களை சொல்றாங்க. அது தான் கேம் என ஜாக்குலின் பேசிக் கொண்டபடியே நகர்ந்து சென்றார். உடனே, அவருடன் ப்ரெண்ட்ஷிப் வைத்தது தான் பெரிய தப்பு என்கிறார் சவுந்தர்யா. தற்போது, இவர்கள் இருவரும் மோதிக்கொள்ளும் ப்ரோமோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.