Prathyusha Challa (Photo Credit: @Crime_Selvaraj X)

ஜனவரி 10, மீரட் (Uttar Pradesh News): மனைவிகளைக் கொடுமைப்படுத்துவது, வரதட்சணை தொடர்பான மரணங்கள் போன்ற பல வழக்குகள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு 1983-ஆம் ஆண்டு இந்திய தண்டனைச் சட்டத்தில், 498A பிரிவானது (Section 498A) சேர்க்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, கணவன் அல்லது அவரது உறவினர்கள் மனைவியைத் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினால், அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம். இந்தப் பிரிவு ‘தெளிகுற்றம்’ (cognizable offence) சார்ந்தது, ஜாமீனில் வெளிவர முடியாதது. இச்சட்டத்தின் கீழ் பிடிவாரண்ட் இல்லாமல் கூட காவல்துறை ஒருவரை கைது செய்யலாம். இந்தச் சட்டம் வரதட்சணை தொடர்பான வழக்குகளில் மட்டும் பாதுகாப்பு அளிப்பதில்லை. குடும்ப ரீதியான கொடுமையிலிருந்தும் பெண்களைப் பாதுகாக்கிறது. Heart Wrenching Horror: கணவன் - மனைவி, 3 மழலைகள் என ஐவர் கழுத்தறுத்து கொலை?; வீட்டில் மீட்கப்பட்ட சடலம்.. அதிர்ச்சியில் மக்கள்.!

பொய் குற்றசாட்டு:

இந்த சட்டத்தை பலர் தவறாக கையாள்கின்றனர். அதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர் தான் பிரத்யுஷா சல்லா, இவர் ஐஐடி ஐஐஎம் பட்டதாரி. இவர் அண்ணன் மனைவி, இவரது குடும்பத்தின் மீது 498A வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பிரத்யுஷா சல்லா மீது எஃப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடு செல்லும் பல வாய்ப்புகளை இழந்துள்ளார். இவர் வெளிநாடு செல்வதற்கு விசாரணை நீதிமன்றத்தில் அனுமதி பெறவே பல நாட்கள் செலவிட வேண்டிஇருந்துள்ளது. உண்மையில் அவர்கள் வரதட்சணையாக ஒரு பைசா கூட வாங்கவில்லை, ஆனால் அவர்கள் சொல்வதைக் கேட்க யாரும் இல்லாமல், இன்று குற்றம் சாட்டப்பட்டவர்களாக நிற்கிறார்கள் என்று பிரத்யுஷா சல்லா பேசிய வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம்: