India Open (Photo Credit: YouTube)

ஜனவரி 09, டெல்லி (Sports News): யோனெக்ஸ்-சன்ரைஸ் இந்தியா ஓபன் 2025 பாட்மிண்டன் தொடரின் 3-வது சீசன் போட்டி வரும் ஜனவரி 14 முதல் 19-ம் தேதி வரை டெல்லி இந்திரா காந்தி மைதானத்தில் உள்ள கேடி ஜாதவ் உள்ளரங்கில் (K. D. Jadhav Indoor Stadium) நடைபெறுகிறது. சூப்பர் 750 தொடரை இந்திய பாட்மிண்டன் சங்கம் நடத்துகிறது. இந்த தொடரின் பரிசுத்தொகை 950,000 அமெரிக்க டாலர் ஆகும். சாம்பியன் பட்டம் பெறுபவர்களுக்கு 11,000 புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தியா ஓபன் 2025 (India Open):

பிடபிள்யூஎஃப் உலக டூர் 750 சூப்பர் தொடரான இதில் இந்தியாவின் சவாலை பி.வி. சிந்து, லக்சயா சென் ஆகியோர் தோளில் சுமக்க உள்ளனர். ஒலிம்பிக் சாம்பியன்களான டென்மார்க்கின் விக்டர் ஆக்செல்சன், தென் கொரியாவின் அன் சே யங், உலகின் முதல் நிலை வீரரான ஷி யூகி உள்ளிட்ட நட்சத்திர வீரர், வீராங்கனைகள் பலர் பங்கேற்கின்றனர். தொடரை நடத்தும் இந்தியாவில் இருந்து 21 பேர் களமிறங்குகின்றனர். Malaysia Open 2025: மலேசிய ஓபன் பேட்மிண்டன் இன்று தொடக்கம்..!

இந்திய வீரர்களின் பட்டியல்:

ஆண்கள் ஒற்றையர்: லக்சயா சென், ஹெச்.எஸ். பிரணாய், பிரியான்ஷு ரஜாவத்.

பெண்கள் ஒற்றையர்: பி.வி.சிந்து, மாளவிகா பன்சோட், அனுபமா உபாத்யாயா, ஆகர்ஷி காஷ்யப்.

ஆண்கள் இரட்டையர்: ஷிராக் ஷெட்டி / சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, கே சாய் பிரதிக் / ப்ருத்வி கே.ராய்.

பெண்கள் இரட்டையர்: ட்ரீசா ஜாலி / காயத்ரி கோபிசந்த், அஸ்வினி பொன்னப்பா / தனிஷா கிராஸ்டோ, ருதுபர்ணா பாண்டா / ஸ்வேதபர்ணா பாண்டா, மன்சா ராவத் / காயத்ரி ராவத், அஸ்வினி பட் / ஷிகா கவுதம், சாக்சி கஹ்லாவத் / அபூர்வா கஹ்லாவத், சானியா சிக்கந்தர் / ரஷ்மி கணேஷ், மிருண்மயி தேஷ்பாண்டே / பிரேரானா அல்வேகர்

கலப்பு இரட்டையர்: துருவ் கபிலா / தனிஷா கிரஸ்டோ, கே.சதீஷ் குமார் / ஆத்யா வரியாத், ரோஹன் கபூர் / ஜி.ருத்விகா ஷிவானி, ஆஷித் சூர்யா / அம்ருதா பிரமுதேஷ்.