Sivappu Aval (Photo Credit: @KalkiOnline X)

ஜனவரி 10, சென்னை (Health Tips): நமது வீடுகளில் முந்தைய காலங்களில் சிற்றுண்டியாகவும், உணவு வகைகளாகவும் அவலை (Aval) சாப்பிட்டு நாம் மகிழ்ந்திருப்போம். சிலர் அவலில் சர்க்கரை, பால் சேர்த்து ருசித்து சாப்பிடுவார்கள், ஒருசில வீடுகளில் அவலை வைத்து விதவிதமான பண்டங்கள், உணவுகள் சமைத்தும் கொடுப்பார்கள். அந்த வகையில், அவலில் வெள்ளை அவல், சிகப்பு அவல் (Sivapu Aval) என இரண்டு வகை இருக்கின்றது. இதில் சிகப்பு அவல் (Red Poha) உடலுக்கு பல்வேறு சத்துக்களை வாரி வழங்கும் வைட்டமின்களை கொண்டுள்ளது. சிகப்பு அவலில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பிரஸ், மாக்னீசு, ஜின்க் ஆகிய தாதுச்சத்துக்கள் கிடைக்கின்றன. மேலும், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, நார்சத்து நிறைந்து காணப்படுகிறது.

இரும்புசத்து வழங்கும்:

சிகப்பு அவலை சாப்பிட்டு வந்தால் உடல் நலனுக்கு முக்கிய பங்காற்றும் செரிமான மண்டலம் நலன்பெற்று வயிற்றுவலி, வயிறு உப்பசம், அஜீரணம் சார்ந்த கோளாறுகள் நீங்கும். இதனை காலை நேரத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் உடல் செரிமானக் கோளாறுகள் கட்டுப்படும். அதேபோல, இரத்தத்தில் இரும்புசத்து குறைவாக இருப்பதால் ஏற்படும் அனீமியா போன்ற பிரச்சனை சரியாகும். சிகப்பு அவலில் இருக்கும் இரும்புசத்து, புதிய அணுக்களை உருவாக்கும். இரத்த அணுக்களின் எண்ணிக்கையும் அதிகமாகும். Pongal Special Recipes: அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி? டிப்ஸ் உள்ளே.! 

உடல் நலனை மேம்படுத்தும்:

நார்சத்து அதிகம் கொண்ட சிவப்பு அவல், உடலில் தேவையில்லாமல் இருக்கும் கொழுப்பை நீக்கும் தன்மை கொண்டது. இதனால் உடல் எடையும் குறையும், இரத்த குழாயில் அடைப்பு வராமல் பாதுகாக்கும். உடல் நலனை மேம்படுத்தும். சிவப்பு அவலில் இருக்கும் சிவந்த நிறத்தில் ஆன்தோசயனின் இருக்கிறது. இது சிறந்த ஆண்டி-ஆக்சிடன்ட் ஆகும். உடலில் செல் கழிவுகளை வெளியேற்றி, செல் சேதமாவதை தடுக்கிறது.

காலை உணவாக எடுத்துக்கொள்ளுங்கள்:

சர்க்கரை நோயாளிகளுக்கு சிவப்பு அவல் மிகவும் நன்மை பயக்கும் உணவுகளில் ஒன்றாகும். அதேபோல, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை சிகப்பு அவளுக்கு உண்டு. இதனால் இரத்த சர்க்கரை அளவை சீராக மேம்படுத்தும். உடலின் இதய துடிப்பு சீராக, இரத்தம் ஆரோக்கியத்துடன் இருக்க தேவையான சத்துக்களை கொண்ட சிகப்பு அரிசியை காலை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு தேவையான, உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வைட்டமின்கள் சிவப்பு அவலில் இருக்கிறது. அதனால் குழந்தைகளும் அதனை எடுத்துக்கொள்ளலாம்.

குறிப்பு: மேற்கூறிய தகவல்கள் பொதுவானவையே. உங்களுக்கு அதுசார்ந்த உடல்நலக்குறைவு / உடல் ஆரோக்கியம் தொடர்பாக சந்தேகம் இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.