ஜனவரி 10, சென்னை (Festival News): “பழையன கழிதலும்,புதியன புகுதலும்” என்று போகிப்பண்டிகை அழைப்பார்கள். அப்படி பழையப் பொருட்களை சுத்தம் செய்து வீடுகளுக்கு வண்ணம் தீட்டி புதுப்பொலிவுடன் பொங்கல் பண்டிகையை (Pongal Festival) கொண்டாடுகிறோம். இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும். இந்த பதிவில் லேட்டஸ்ட்லி தமிழ், இனிய தமிழ் சொந்தங்களுக்காக பொங்கல் பண்டிகையின் பதிவுடன், வாழ்த்துக்களையும் பதிவு செய்கிறது. இதனை நீங்கள் கொண்டாட்ட காலத்தில் உங்களின் வாட்சப், முகநூலில் பகிர்ந்து இனிய பொங்கல் பண்டிகையை நண்பர்களுடன் நல்கருத்துடன் கொண்டாடலாம்.
தைப் பொங்கல்:
தைப்பொங்கல் (Thai Pongal) அன்று சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து அனைவரும் குளித்துவிடவும். ஏனென்றால் தைப்பொங்கல் அன்று நாம் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனால், காலையில் சூரியன் உதயமாகும் முன்பு நாம் குளிக்க வேண்டும். அதுபோல, வீட்டில் இருக்கும் தாய்மார்கள் நெற்றியில் கட்டாயம் பொட்டு வைத்த கொண்டு தான் பொங்கல் வைக்க வேண்டும். வீட்டில் கிழக்கு திசையை நோக்கி தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் பொங்கல் வைக்கும் பானையில் இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து மற்றும் திருநீறு பொட்டு வைத்திருக்க வேண்டும். பொங்கல் வைப்பதற்கு முன்பு மறக்காமல் மஞ்சளால் பிள்ளையார் செய்து அதற்கு குங்குமம் பொட்டு வைத்து மாக்கோலம் போட வேண்டும். அடுப்பில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்ல வேண்டும். பின்னர், சாமி கும்பிட்டு பொங்கலை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு அன்பை பரிமாறி கொள்ள வேண்டும். தை திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. இதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரமாகும். Pongal Kolam 2025: பொங்கலுக்கு இப்படி கோலங்களை போடுங்க.. ஏரியாவே வாய்ப்பிளக்கும்.!
தைப்பொங்கல் வாழ்த்து 2025 (Thai Pongal Wishes Tamil 2025):
1. மங்களம் பொங்கட்டும்… மகிழ்ச்சி வெள்ளம் பெருகட்டும்… எண்ணியது ஈடேற… தமிழர் திருநாள்… தைப் பொங்கல் வாழ்த்துகள்…
2. அன்பும் ஆனந்தமும் பொங்கிட… அறமும் வளமும் தளைத்திட… இல்லமும் உள்ளமும் பொங்க…இனிய தமிழர் திருநாளாம்… பொங்கல் நல்வாழ்த்துகள்
3. உழவனுக்கு ஒரு திருநாளாம்.. உலகம் போற்றும் நன்னாளாம்... சூரியனை வணங்கி விட்டு... சுருக்குப் பையில் காசு எடுத்து தித்திருக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம்… அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள்
4. காசுக்கு கரும்பு வாங்கி... அதை கால் பாகமாக உடைத்து... கடவாய் பல்லில் கடித்து... தித்திப்போடு கொண்டாடுவோம்... இந்த பொங்கல் திருநாளை... இனிய பொங்கல் வாழ்த்துகள்
5. உறவுகளின் வீட்டில் புன்னகை பொங்க… இனம் புரியா இன்பம் மனதில் பொங்க… நண்பர்கள் சூழ மகிழ்ச்சி பொங்க… பொங்கட்டும் தைப் பொங்கல்
6. வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்… வறட்சி நீங்கி செழிப்பு பொங்கட்டும்… உடலில் பிணி நீங்கி ஆரோக்கியம் பொங்கட்டும்… அறியாமை நீங்கி அறிவு பொங்கட்டும்… இருள் நீங்கி ஒளி பொங்கட்டும்… அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கல் பொங்கட்டும்
7. அன்பு பெருக… மகிழ்ச்சி என்றும் தங்க… செல்வம் நிலைக்க… நோய் நீங்க… முயற்சி பெருக… வெற்றி என்றும் உங்கள் வசமாக… இனிய பொங்கல் வாழ்த்துகள்
8. கரும்பின் சுவை போல உங்கள் வாழ்க்கை என்றென்றும் தித்திக்கட்டும்… இனிய பொங்கல் வாழ்த்துகள்
9. பிறந்தால் வழி பிறக்கும் தடைகள் தகரும், தலைகள் நிமிரும், நிலைகள் உயரும், நினைவுகள் நிஜமாகும், கதிரவன் விழிகள் நல்ல விடியலை கொடுக்கும், அவலங்கள் அகலும், இதயம் கனிந்த தமிழர் திருநாள் வாழ்த்துகள்
10. தரணியெங்கும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாளில் அனைவரது மனங்களும் இன்பம் பொங்க… இனிய பொங்கல் வாழ்த்துகள்
மாட்டுப் பொங்கல் (Mattu Pongal):
ஆண்டு முழுவதும் உழவுத் தொழிலுக்கு உற்ற நண்பனாக உதவிய மாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தை இரண்டாம் நாள் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. இது பட்டி பொங்கல் அல்லது கன்று பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது. பொதுவாக பசுக்களில் எல்லா தேவர்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. எனவே மாட்டுப் பொங்கல் என்று பசுக்கள் இணை இறைவனாக நம்பி வழிபட்டு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர். காலை 9.30 முதல் 10.30 வரை மாட்டுப் பொங்கல் வைக்க நல்ல நேரமாக சொல்லப்பட்டுள்ளது. Mattu Pongal 2025: "உழவனின் நண்பனுக்கு நன்றி சொல்லும் நாள்" - இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்.!
மாட்டுப் பொங்கல் வாழ்த்து 2025 (Mattu Pongal Wishes Tamil 2025):
11. உழவனுக்கு மட்டும் அல்ல
ஜல்லிக்கட்டு நிகழ்விற்கு
பிறகு உலகுக்கே நீ
செல்லப்பிள்ளை தான்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
12.கலைப்பறியாது உழைக்கும்
உனக்கு தலை வணங்கி
நன்றி கூறுகிறேன்
மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
13. உழவனின் நண்பனுக்கு
நன்றி சொல்லும் நாள்
இனிய மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
14. இது உழவர்களின் தோழனை
கொண்டாடும் திருநாள்
அனைவருக்கும் இனிய
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15. வீரத்தமிழர்களுக்கு
மாட்டுப் பொங்கல் வாழ்த்துகள்!
16. தனித்த மௌனங்கள்
உழவன் நண்பனுக்கு
கவிதையால் ஒரு மரியாதை
பொங்கலோ பொங்கல்!
17. உழைத்து களைத்த உழவர்களுக்கு
ஒருநாள் உழவர் திருநாள்
உழைத்து களைத்த உனக்கும்
ஒரு நாள் மாட்டுப்பொங்கல்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
18. உழவனின் பிரியமான
தோழனுக்கு பொங்கல்
பொங்கலோ பொங்கல்!
மாட்டு பொங்கல்!!
19. தாய்ப்பால் அருந்தாமல்
வளர்ந்தவர் பலர்
பசும் பால் அருந்தாமல்
வளர்ந்தவர் இலர்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்
20. வீரம் போற்றும் ஜல்லிக்கட்டு
தமிழா அதை நீ வென்று காட்டு
மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
காணும் பொங்கல்:
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா போன்ற தென்னிந்திய மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் காணும் பொங்கல், திருவள்ளுவர் நாளாகவும் (Thiruvalluvar Day) சிறப்பிக்கப்படுகிறது. அன்று பொங்கல் வைக்க நல்ல நேரமாக காலை 10:30 முதல் 11:30 வரை கணிக்கப்பட்டுள்ளது. அந்த சமயத்தில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம். பெற்றோர், தாத்தா-பாட்டி ஆகியோரிடம் ஆசிபெறலாம். Pongal Special Recipes: அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி? டிப்ஸ் உள்ளே.!
காணும் பொங்கல் வாழ்த்து 2025 (Kaanum Pongal Wishes Tamil 2025):
21.நண்பர்கள் மற்றும் உறவினர்கள்
சந்தித்து மகிழ்திட
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
22.நண்பர்களை நேசிக்கவும்
உறவுகளை போற்றவும்
பெரியோரை வணங்கவும்
தமிழர்கள் உருவாக்கிய
தனிப்பெரும் பண்டிகை
காணும் பொங்கல்
23.பண்டிகை காலங்களில்
உறவுகளை காண வேண்டும்
என்பதற்காக கொண்டாடப்படுகிறது
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
24.காண வேண்டும் காணும் பொங்கல்
சொந்தங்களை தேடி நீங்கள்
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
25.குடும்பம் முழுதும் கூடி இருக்கும்
கும்மாளமாய் நல்ல சந்தோசமாய்
உரிமையோடு முறை சொல்லி
உறவுகள் பகிர்ந்து கொள்ளும்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
26.ஆறு குளங்களில் கூடி
உணவருந்தி கொண்டாடினான்
தமிழர் திருநாளாக, தமிழன்
இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
27.காணும் உறவுகள் எல்லாம்
நம் சொந்தங்களாக
மலரட்டும் இனிய
காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
28.சொந்தங்களை சந்தித்து
அன்பு பொங்க மகிழ்ந்திட
காணும் பொங்கல் வாழ்த்துக்கள்
29.பகைமையை விட்டுவிட்டு
அன்பை அனைவரிடமும்
பரப்புவோம் அன்புடன்
இனிய காணும் பொங்கல் நல்வாழ்த்துகள்
30.காளையர்கள் கன்னியரை வட்டமிட
காணாத பெரிவர்கள் கும்மாளமிட
களிப்புடன் இன்று காண்போம்
காணும் பொங்கல் கொண்டாடுவோம் !
தித்திக்கும் கரும்பு போல, இனி வரும் நாட்களில் பொங்கல் பண்டிகையைப்போல உங்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் கிடைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) வாழ்த்துகிறது.
Thai Pongal 2025 Images & Thai Pongal Wishes WhatsApp Status Messages, HD Wallpapers, Quotes and SMS To Share on Pongal Wishes in Tamil