ஜனவரி 09, சென்னை (Cinema News): ஈஸ்வரன், பூமி போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் நிதி அகர்வால் (Actress Nidhhi Agerwal). தமிழில் தனக்கு வரவேற்பு கிடைக்காததால் தெலுங்கில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். இவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு சென்னையில் உள்ள ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகமே நடத்தினர். நடிகை நிதி அகர்வால் தற்போது, பவன் கல்யாண் நடிப்பில் உருவாகிவரும் ஹரிஹர வீர மல்லு என்ற படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் கிருஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. Kadhalikka Neramillai Trailer: “உங்களின் ஃபெமினிஸ்ட் கண்ணோட்டத்தை எல்லா விஷயங்களிலும் திணிக்காதீர்கள்” - வெளியான காதலிக்க நேரமில்லை பட டிரைலர்.!
காவல் நிலையத்தில் புகார்:
இதனிடையே, நிதி அகர்வால் ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், சமூக வலைத்தளம் வாயிலாக தனக்கு மர்ம நபர் கொலை மிரட்டல் விடுகிறார். தன்னை ஆபாசமாக பேசி, எனது குடும்பத்தையும் கொலை செய்திடுவதாக மிரட்டுகிறார். இதனால் அவரின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.