Pongal 2025 (Photo Credit: Team LatestLY)

ஜனவரி 06, சென்னை (Festival News): பொங்கல் பண்டிகை (Pongal Festival)தமிழர்களின் மிக முக்கியமான சிறப்புமிக்க பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இது விவசாயம், தமிழர்களின் கலாச்சாரம், இயற்கை ஆகியவற்றை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் ஒரு விழாவாகும். தை மாதத்தின் முதல் நாளில் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. நெல், மஞ்சள், கரும்பு போன்ற பயிர்களுக்கு அறுவடைத் திருநாளாகவும், வருடத்தில் நல்ல விளைச்சலுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தை மாதம் முதல் நாளில் இருந்து கொண்டாடப்படும் நான்கு நாள் திருவிழாவாகும்.

2025 பொங்கல் பண்டிகை தேதி:

போகி பண்டிகை - 13 ஜனவரி 2025 - திங்கள் கிழமை

தைப்பொங்கல் - 14 ஜனவரி 2025 - செவ்வாய் கிழமை

மாட்டுப் பொங்கல் - 15 ஜனவரி 2025 - புதன் கிழமை

காணும் பொங்கல் - 16 ஜனவரி 2025 - வியாழன் கிழமை. Pongal Holidays 2025: பொங்கல் பண்டிகை 2025; 6 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு..!

தைப் பொங்கல்:

தைப்பொங்கல் (Thai Pongal) அன்று சூரியன் உதயமாகும் முன்பே எழுந்து அனைவரும் குளித்துவிடவும். ஏனென்றால் தைப்பொங்கல் அன்று நாம் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுகிறோம். அதனால், காலையில் சூரியன் உதயமாகும் முன்பு நாம் குளிக்க வேண்டும். அதுபோல, வீட்டில் இருக்கும் தாய்மார்கள் நெற்றியில் கட்டாயம் பொட்டு வைத்த கொண்டு தான் பொங்கல் வைக்க வேண்டும். வீட்டில் கிழக்கு திசையை நோக்கி தான் பொங்கல் பானை வைக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல் பொங்கல் வைக்கும் பானையில் இஞ்சி கொத்து மற்றும் மஞ்சள் கொத்து மற்றும் திருநீறு பொட்டு வைத்திருக்க வேண்டும். பொங்கல் வைப்பதற்கு முன்பு மறக்காமல் மஞ்சளால் பிள்ளையார் செய்து அதற்கு குங்குமம் பொட்டு வைத்து மாக்கோலம் போட வேண்டும். அடுப்பில் பொங்கல் பொங்கும் போது அனைவரும் 'பொங்கலோ பொங்கல்' என்று சொல்ல வேண்டும். பின்னர், சாமி கும்பிட்டு பொங்கலை வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு அன்பை பரிமாறி கொள்ள வேண்டும்.

பொங்கல் வைக்க உகந்த நேரம்:

தை திருநாள் முதல் நாளில் பொங்கல் வைக்க காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை நல்ல நேரம் உள்ளது. இதன் பின்னர், காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை உகந்த நேரமாகும். Bhogi Festival 2025: "பழையன கழிதலும் புதியன புகுதலும்" - போகி பண்டிகை 2025 வரலாறு, அசத்தல் விளக்கங்கள் இதோ.! 

பொங்கல் பண்டிகையின் சிறப்புகள்:

பொங்கல் பண்டிகையின் முந்தைய நாள் போகி (Bhogi) ஆகும். இந்நாளில் பழையவற்றை விடுத்து புதியதாய் தொடங்குவது வழக்கம். வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரிப்பது போகி பண்டிகையாகும். தைப்பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையின் மிக முக்கியமான நாளாகும். இந்நாளில் விவசாயிகள் தங்கள் நன்றியை நிலம், பசுமாடு, மற்றும் சூரியனை நோக்கி தெரிவிக்கின்றனர். புதிதாக அறுவடை செய்த அரிசி, நெய் சேர்த்து 'பொங்கல்' எனப்படும் சிறப்பு உணவு தயாரிக்கப்படுகிறது. தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் மறுநாள், விவசாயத்தின் அடிப்படையான மாடுகளைப் போற்றி கௌரவிக்கும் நாளாக மாட்டுப் பொங்கல் (Mattu Pongal) கொண்டாடப்படுகிறது. மாடுகளை அழகாக அலங்கரித்து, வண்ணம் தீட்டித் திருவிழா கொண்டாடுவது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு கிராமங்களிலும் தமிழர்களின் வீர விளையாட்டான கபடி, ஜல்லிக்கட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெறும். இறுதி நாள், காணும் பொங்கல் (Kaanum Pongal) இது பொங்கல் பண்டிகையின் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும் ஒரு நாள். இந்த நாளில், குடும்பங்கள் ஒன்று கூடி, மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பண்டிகையைக் கொண்டாடுவார்கள். பொங்கல் பண்டிகை என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. அது நம் வாழ்வின் ஒரு அங்கம், நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.