ஜனவரி 05, சிட்னி (Crickent News): ஆஸ்திரேலியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, பார்டர் கவாஸ்கர் டிராபி (Border-Gavaskar Trophy) 2024 - 25ல் விளையாடியது. 5 டெஸ்ட் தொடர்களாக இந்த ஆட்டங்கள் நடைபெற்ற நிலையில், இறுதி ஆட்டம் ஜனவரி 3ஆம் தேதி சிட்னியில் உள்ள சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த இந்திய அணி 72.2 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழந்து 185 ரன்கள் எடுத்திருந்தது. இதனையடுத்து, மறுமுனையில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 81வது ஓவர் முடிவில் 10 விக்கெட் இருந்து 181 ரன்கள் எடுத்திருந்தது. பின் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்திய அணி 39.5 ஓவர் முடிவில், 10 விக்கெட்டை இழந்து, 157 ரன்கள் மட்டும் குவித்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி:
இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் இன்று நடைபெற்ற நிலையில், 27 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 162 ரன்கள் குவித்து வெற்றி அடைந்தது. இந்த ஆட்டத்தின் வாயிலாக பார்டர் கவாஸ்கர் டிராபி ஆஸ்திரேலியா அணியால் கைப்பற்றப்பட்டுள்ளது. 3 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இந்தியாவும் வெற்றி அடைந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி வீரர்களில் ரிஷப் பண்ட் அதிகபட்சமாக 33 பந்துகளில் 61 ரன்கள் அடித்திருந்தார். முதலில் இன்னிங்க்ஸை பொறுத்தவரையில், எந்த வீரரும் அரை சதத்தை தாண்டவில்லை. அதே வேளையில், ஆஸ்திரேலியா அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில், வெப் ஸ்டார் 15 பந்துகளில் 57 ரன்னும் அதிகபட்சமாக அடித்தார். ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து தடுமாற்றத்துடன் விளையாடி வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் ஆகியவற்றின் திறன் அடிப்படையில் தனது வெற்றியை அடைந்திருக்கிறது. இந்த படுதோல்வியின் வாயிலாக, இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக உலகளவிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.
ஆஸி., அணி பார்டர் கவாஸ்கர் ட்ராபியை கைப்பற்றியது:
A spirited effort from #TeamIndia but it's Australia who win the 5th Test and seal the series 3-1
Scorecard - https://t.co/NFmndHLfxu#AUSvIND pic.twitter.com/xKCIrta5fB
— BCCI (@BCCI) January 5, 2025