Agriculture (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, சென்னை (Agriculture Tips): ஒரே இடத்தில் முதன்மை பயிர்களுக்கு இடையில் பிற செடிகளை நடவு செய்து, உற்பத்தியை அதிகப்படுத்துவதே ஊடுபயிர் வேளாண்மை ஆகும். விவசாயிகள் இம்முறை வேளாண்மை மூலம் கூடுதல் வருமான ஈட்டலாம். ஊடுபயிர்கள் முதன்மை பயிர்களுடன் குறுகிய காலத்தில், பயிர் செய்து சாகுபடி செய்வதாகும். இது விவசாயிகளுக்கு குறுகிய காலத்தில் ஒரு வருமானத்தை பெற்றுத் தருகிறது. ஊடுபயிர்கள், முதன்மை பயிர்களுக்கு தீங்கு விளைவிக்காது, மகசூலையும் குறைக்காது. தனிப்பயிர்களுக்குள் விளைவிக்கும் அனைத்துப் பயிர்களும் ஊடுபயிர்களே. இம்முறை முன்பை விட தற்போது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடவு செய்யும் பயிர்களுக்கு ஏற்ப ஊடுபயிரைத் தேர்ந்தெடுந்து விவசாயம் செய்ய வேண்டும். இதனால் நஷ்டத்தை கட்டுப்படுத்தி கூடுதல் வருமானம் பெறலாம். குறைவான இடத்தில் விவசாயம் செய்பவர்களும் இம்முறையை பின்பற்றலாம்.

ஊடு பயிர்கள், முதன்மை பயிர்களுக்கு ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல், தண்ணீர் அதிகம் தேங்குதல் போன்றவைகளைத் தடுக்கும். மேலும் முதன்மை பயிர்கள் விளைச்சல் தரும் வரையில், விவசாயிகளுக்கு ஒரு குறிப்பிட்ட வருமானம் இதிலிருந்து கிடைக்கும். மேலும் இந்த செடிகள் இருப்பதால் களைசெடிகளையும் எளிதில் கட்டுப்படுத்தலாம். பல விதத்தில் ஊடு பயிர்களை பயிரிடலாம். ஊடு பயிர்கள் ஒரே பயிராக இருக்க வேண்டும் என அவசியமில்லை. பல குறுகிய கால பயிர்களை, கலப்பு ஊடு பயிராக முதன்மை செடிகளுக்கு நடுவிலும், ஓரங்களிலும், பாத்திகளின் நடுவிலும் பயிர் செய்யலாம். முதன்மை பயிர்களுக்கு வேலியாகவும் ஒரு சில வேலிப் பயிர்களை பயிரிடலாம். Sivappu Aval Nanmaigal: சிவப்பு அவல் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. அசத்தல் தகவல் இதோ.!

கரும்பு:

கரும்பை முதன்மை பயிராக நடவு செய்தவர்கள், தக்கை பூண்டை ஊடுபயிராக சாகுபடி செய்யலாம். இது கரும்புகளில் ஏற்படும் தண்டு துளைப்பானைக் கட்டுப்படுத்துகிறது. கரும்பு பயிர்களுக்கு இடையில் சோயாபீன்ஸை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும். மேலும் வெங்காயத்தையும் பயிரிடலாம். இது இடைக்கணுப்புழுதி தாக்குதலைக் குறைக்கிறது.

மக்கா சோளம்:

மக்காச் சோளத்தில் ஊடுபயிராக ஆமணக்கு பயிரை வளர்த்து சாகுபடி செய்யலாம். இது புரொடினியா புழுக்களைக் கட்டுப்படுத்துகிறது. மக்காச் சோளத்தில் ஊடுபயிராக சோளத்தை பயிரிடலாம். இது குருத்து ஈ, மற்றும் தண்டு துளைப்பானின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துகிறது. மக்காச் சோளத்துடன் உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப்பயிறு, சோயா மொச்சை போன்ற பயிர்களை ஊடுபயிராக விளைவிக்கலாம்.

புகையிலை:

புகையிலை பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு சாகுபடி செய்வதன் மூலம், புகையிலை வெட்டு புழுக்களின் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். பயிரில் பூச்சி மற்றும் நோய் விரட்டியாக வேம்பு, சீதா, நக்ஸ்வாமிகா போன்ற மரங்களை ஆங்காங்கு நடலாம். செவ்வந்திப் பூ, கடுகு, ஆமணக்கு போன்ற பயிர்களை சுற்றி வளர்த்துப் புகையிலை பயிரைத் தாக்கும் பூச்சிகளை விரட்டலாம். கரையான்களை கட்டுப்படுத்த வெட்டிவேர், திருகுகள்ளி, எருக்கு, காட்டாமணக்கு ஆகிய செடிகளை வயலில் ஆங்காங்கே வளர விடலாம். கொத்தமல்லி, வெங்காயம், பீட்ருட் ஆகியவை பயிரிட்டு கூடுதல் வருமானம் பெறலாம்.

நெல்:

வயலின் மட்டத்திலிருந்து வரப்பின் ஓரத்தில் மூன்றில் ஒரு பங்கு உயரத்தில் தட்டைப் பயிர்களை விதைக்க வேண்டும். இதில் அஷ்வினிப் பூச்சிகள் வளரும். இது பொறி வண்டுகளை அதிகம் கவரும் இந்த பூச்சிகள் நெல் வயலில் இருக்கும் பிற பூச்சிகளை அழிக்கிறது. நெல் வயலில் ஊடுபயிராக மணிலா, பயிரு வகைகள், வெண்டை, கிளைரிசிடியா போன்றவைகளை பயிரிடலாம். Pongal Special Recipes: அசத்தலான சுவையில் வெண்பொங்கல் செய்வது எப்படி? டிப்ஸ் உள்ளே.!

வெங்காயம்:

வெங்காயத்தை தாக்கும் வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த வரப்பு ஓரங்களில் ஆமணக்கை வளர்ச்சிப் பயிராக பயிரிடலாம். இதில் பூச்சிகளின் முட்டை, புழுக்கள் தங்கும். இவைகளை எளிதில் அழித்து பூச்சி தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். வெங்காயப் பயிரை கரை அமைத்து 2 அல்லது 3 வரிசையாக நடவு செய்திருப்பவர்கள், வரப்பை சுற்றிலும் சூரிய காந்தியை ஊடு பயிராக வளர்க்கலாம்.

நிலக்கடலை:

நிலக்கடலை பயிரில் ஊடுபயிராக ஆமணக்கு செடிகளை, வயல் ஓரங்களில் 2 மீட்டருக்கு ஒரு செடி வீதம் நடவெ செய்ய வேண்டும். இதன் மூலம் புழு பூச்சிக்களைக் கட்டுப்படுத்தலாம். நிலக்கடலையோடு கம்பு கலந்து கலப்பு பயிராக விதைக்கலாம். இது சுருள் பூச்சி, இலைப்பேன் மற்றும் அந்துப்பூச்சியைக் கட்டுப்படுத்துகிறது. தட்டை பயிரை ஊடு பயிராக வளர்ப்பதால் சிவப்புக் கம்பளிப்பூச்சி தாக்குதல் கட்டுப்படும்.