ஜனவரி 08, சென்னை (Chennai): ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் 14 ஆம் தேதி தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பொங்கல் பண்டிகையின் முதல் நாளாக போகிப் பண்டிகை (Bhogi) கொண்டாடப்படுகிறது. உழவுக்கு வழிவகை செய்த கதிரவனுக்கும், அதற்கு உறுதுணையாக இருக்கும் பசுவுக்கும் நன்றி சொல்லும் விதமாக கதிரவனை போற்றி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் போகிப்பண்டிகை (Bhogi 2025) எப்போதும் களைகட்டும். வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், தேவை இல்லாத பொருட்களை புறக்கணித்து, புதிய பொருட்களை வரவேற்று கொண்டாடப்படும் போகிப் பண்டிகை, "பழையன கழிதலும் புதியன புகுதலும்" என்ற பழமொழியை அடிப்படையாகக் கொண்டு சிறப்பிக்கப்படுகிறது.
தீய எண்ணங்களை தீயிலிட்டு எரியுங்கள்:
அதாவது, பழைய தீமையான பழக்கங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களும் ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் போன்ற நிகழ்வுகளை எண்ணத்தில் இருந்து எடுத்து, நல்ல பழக்கங்களைக் கொண்டு செயல்படுவதன் நோக்கத்துடன் போகிப் பண்டிகை அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் பொருளே பின்னாளில் போகி அன்று பழைய பொருட்களை மட்டும் எரித்தால் போதுமானது என்றாகி வழக்காகி இருக்கிறது. போகி அன்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலும், கூரைகளில் பூலாப்பூ, வேப்பிலை, ஆவாரம்பூ, மாவிலை தோரணம் ஆகியவை அலங்கரிக்கப்படும். ஒரு சில ஊர்களில் போகிப் பண்டிகை என்று வைகறை நேரத்தில் நிலைப்பொங்கல் நிகழ்வும் நடைபெறுகிறது. Pongal 2025: "தை பிறந்தால் வழி பிறக்கும்" 2025 பொங்கல் வைக்க உகந்த நேரம்.. சிறப்புகள் இதோ..!
இறைவனுக்குக் படைக்க:
வீட்டின் முன் வாசலில் மஞ்சள் பூசி திலகமிட்டு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, குங்குமம் ஆகியவை வைத்து தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி தெய்வங்களை வணங்கும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. போகிப் பண்டிகை அன்று போளி, வடை, பாயாசம், மொச்சை, சிறுதானியம், பருப்பு வகை போன்றவற்றை வைத்து இறைவனுக்கு படைக்கலாம். 2025 அன்று போகி பண்டிகை 14 ஜனவரி அன்று கொண்டாடப்படுகிறது. அன்று பொங்கல் வைத்து (Bhogi Pongal 2025) வழிபட நல்ல நேரமாக காலை 07:30 மணிமுதல் 08:30 மணிவரையிலும், மாலை 04:30 மணிமுதல் 05:30 மணிவரையிலும் கணிக்கப்பட்டுள்ளது.
போகியின் மற்றொரு வரலாறு:
அதேபோல, போகம் என்றால் மகிழ்ச்சி, அது இன்பத்தை குறிக்கிறது. போகத்திற்கு அதிபதியான இந்திர பகவான், விவசாயிகளுக்கு மழை பெய்து அவர்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிக்கிறார். இதனால் ஒரு கட்டத்தில் கர்வம் கொண்ட இந்திரன் ஆணவப்பட, அவனின் ஆணவத்தை அழிக்க பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கோவர்தன மலைக்கு மக்களை வழிபாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் இந்திரன் ஏழு நாட்கள் விடாமல் பெரு மழையை கொட்டித்தீர்த்த போதிலும், மக்களை துன்பத்திலிருந்து பாதுகாக்க கோவர்தன மலையை குடைபோல தனது ஒற்றை விரலால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தாங்கிப்படுத்து மக்களை காத்து, இந்திரனின் கர்வத்தையும் அடக்கினார். இது புராணங்களில் உள்ளது, பின்னாளில் இதுவே போகிப் பண்டிகையாக சிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஒவ்வொருவரும் அவரின் தீய எண்ணங்களை விட்டொழிந்து, நல்ல எண்ணங்களுடன் புதிய ஆண்டின் பயணத்தை, வளர்ச்சிப்பாதையில் தொடங்கி முயன்றதை அடைய லேட்டஸ்ட்லி தமிழ் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.