ஜனவரி 10, மும்பை (Technology News): மின்சாரத்தை போலவே தற்போதெல்லாம் மின் கட்டணங்களும் ஷாக் கொடுக்கும் அளவிற்கு வருகின்றன. செலவளியும் மின்சார யூனிட்டுகளுக்கு ஏற்ற கட்டணம் கட்ட வேண்டும். அதிலும் ஒருசில மாதங்களில் அளவு கடந்து பயன்படுத்திவிட்டால் மின் கட்டணம் செலவே பெரியதாகிவிடும். மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என பலருக்கும் தெரியும் ஆனால் அதை முறையாக செயல்படுத்த மாட்டார்கள் . ஆனால் அதுவே மின்கட்டணத்தை நினைத்து பயப்படாமல் இருக்க வைக்கும் என்பது நினைவிருக்கட்டும். மின்சாரத்தை சேமிப்பதற்காக (Power Saving) சில எளிய வழிகளை உங்களுக்காக வழங்குகிறோம்.
மின்சாரத்தை சேமிக்க எளிய வழிகள்:
- வீடு கட்டும் போது சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் இருப்பது போன்று வீடு கட்ட வேண்டும். இது வீட்டின் நன்மைக்காகவும், காற்று உள்ளே வரவும், வெளியில் செல்லவும் இருப்பதற்காக இவ்வாறு கட்ட வேண்டும். மேலும் இவ்வாறு கட்டுவதால் பகல் நேரங்களில் மின்விளக்குகள் தேவைப்படாது. மேலும் சுவர்களுக்கு வண்ணங்கள் அடிக்கும் போது டார்க் நிறங்களாக இல்லாமல் லைட் நிறங்களாக இருக்க வேண்டும். இது வீட்டைப் பளிச்சென்று காட்டும். Gold Holding Limit: இந்தியாவில் ஒருவர் வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம்? நகை பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க.!
- மஞ்சள் நிற குண்டு பல்புகளைத் தவிர்த்து டியூப்லைட், மற்றும் எல்இடி பல்புகள் பயன்படுத்த வேண்டும். இது குறைவான மின்சாரத்தை மட்டுமே எடுக்கும். எரிவதற்கு நேரம் எடுத்து கொள்ளும் விளக்குகளால் மின்சாரம் வீணாகும். எப்போதும் மின்விளக்குகளை எரியவிட வேண்டாம் தேவை முடிந்ததும் அனைத்து விட வேண்டும்.
- வாஷிங் மிஷினில் துணிகளை துவைக்கையில், தேவைப்பட்டால் மட்டுமே ட்ரையர்களை பயன்படுத்தவும். துணிகளை வெயிலில் காயப்போடுவதே நல்லதும் கூட. எல்லா நேரமும் ட்ரையர்களை பயன்படுத்தாமல் இருப்பது மின்சாரத்தை மிச்சப்படுத்த உதவும். ஹீட்டர்களை பயன்படுத்தினால் தண்ணீர் சூடானதும் உடனே பயன்படுத்துங்கள். வெகு நேரம் ஹீட்டர்களை ஆன்-னிலேயே வைக்க வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களிலேயே அதிக மின்சாரத்தை வாட்டர் ஹீட்டர்கள் எடுக்கும்.
- யார் பார்க்கிறர்களோ இல்லையோ வீட்டில் டிவி 24 மணிநேரமும் ஓடிக்கொண்டிருக்கும். அதிலும் ஒரு சில வீடுகளில் ரூமிற்கு ரூம் டிவி வைத்து விருப்பட்டதை பார்க்கின்றனர். ஒரு ரூமில் சீரியல் என்றால், இன்னொரு ரூமில் கிரிக்கெட் என ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் லேப்டாப்களில் வேப்சீரிஸ் என அனைத்தும் தனித்தனியாக பார்க்கின்றனர். இவ்வாறில்லாமல் ஒரே இடத்தில் ஏதேனும் ஒன்றை குடும்பமாக பார்க்கலாம்.
- முடிந்தவரை வீட்டில் குடும்பத்தாருடன் இருக்கும் போது பால்கேனி , மாடிகளில் வெளிச்சம் நிறைந்த பகுதிகள் அல்லது ஓபன் ஸ்பேஸில் செலவிட்டால் மின்சாரத்தை கணிசமாக சேமிக்கலாம். மற்றும் ஏசி போட்டு தூங்கும் போது உடல் நிலையும் கெட்டுவிடும். அதிக் குளிரில் வைத்து போர்வை இழுத்து போர்த்தி தூங்காமல், உறங்கச் செல்வதற்கு முன்பே ஏசி ஆன் செய்து விட்டு அறை குளிரானதும் ஆஃப் செய்து விடுவது நல்லது.
- இரவு பகலாக ஓடும் மின்விசிறிகள் தான் அதிக மின்சாரத்தை எடுத்துக் கொள்கிறது. இதற்கு high efficiency உடைய மின் விசிறிகளைப் பயன்படுத்த வேண்டும். இது மின் செலவைக் கட்டுக்குள் வைக்கும். ஒரு நாளில் மொத்தமாக வெளியில் செல்லும் போது அணியும் துணிகளை தேய்த்து எடுத்து வைக்கலாம். அயன் பாக்ஸிற்கு பதிலாக நிலக்கரி இஸ்திரி பெட்டியைப் பயன்படுத்தலாம்.
- வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது மின் சாதனங்கள் அனைத்தும் அணைத்துள்ளதா என சரிபார்த்து செல்ல வேண்டும். இது மின்சாரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி வீட்டிற்கும் பாதுகாப்பானதாகும்.
- மேலும் வீட்டின் வெளியில் போடப்படும் மின்விளக்குகள் சோலாராக வைத்துக் கொள்ளுங்கள். இது சூரிய ஒளியினால் இயங்குவதால் மின்சக்தி தேவையில்லை. மேலும் பேட்டரிகள், டார்ச்லைட்கள் போன்ற சிறிய மின்சாதனங்களையும் சூரிய சக்தியில் பயன்படுத்தலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்துவதற்காக எதுவும் பயன்படுத்த கூடாது என்றில்லை. தேவையான அளவிற்கு மட்டும் பயன்படுத்திவிட்டு மின்சாரத்தை சேமிக்க வேண்டும்.