ஜனவரி 10, சென்னை (Cinema News): தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் இயக்குனர் ஷங்கர், தெலுங்கில் முன்னணி நடிகராக அறியப்படும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை இயக்கி வந்தார். அரசியல் அதிரடி கொண்ட கேம் சேஞ்சர் திரைப்படத்திற்கு இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் கதை எழுதியிருந்தார். ரூ.400 கோடி செலவில் உருவாகியுள்ள கேம் சேஞ்சர் (Game Changer) திரைப்படம், 3டி, ஐ-மேக்ஸ் முறையிலும் உலகளவில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உட்பட பல மொழிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியானது. டத்தில் நடிகர் ராம் சரணுடன் கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில், நாசர், பிரகாஷ் ராஜ், ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை, தில் ராஜு தயாரித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். எஸ்.திருநாவுக்கரசு இப்படத்திற்கு மிகவும் பிரம்மாண்ட திரையுடன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
படத்தின் கதை:
ராம் சரண் படத்தில் மாவட்ட ஆட்சியராக வருகிறார். நேர்மையே வாழ்க்கையாக கொண்ட இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆவேசம் அதிகம். பதவியேற்ற உடனே ஊழல்வாதிகள் மீது ஆக்ரோஷமாக நடவடிக்கை எடுக்க தொடங்குகிறார். இது ஊழலில் மூழ்கியிருக்கும் அமைச்சர் எஸ்.ஜே. சூர்யாக்கு பிடிக்கவில்லை. இதனால் ராம் சரணுக்கும், எஸ் ஜே சூர்யாவுக்கும் மோதல் ஏற்பட, ஒரு கட்டத்தில் முதலமைச்சரை பதவிக்காக எஸ் ஜே சூர்யா கொல்லவும் செய்கிறார். ஆனால், இறப்பதற்கு முன்பு முதலமைச்சர் ஒரு வீடியோவில் அடுத்த முதலமைச்சர் ராம் சரண் என வெளியிட, எஸ் ஜே சூர்யா மோதல் மேலும் பல மடங்கு ஆக, பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை. Nidhhi Agerwal Complaint: சமூகவலைத்தளத்தில் வந்த கொலைமிரட்டல்.. காவல் நிலையத்தில் புகாரளித்த நிதி அகர்வால்.!
பிளஸ்:
ராம் சரண் தந்தை, மகன் என இரண்டு வேடங்களிலும் நடிகராக தன்னை நிரூபித்துள்ளார். கியாரா அத்வானி பாடல்களில் வந்து போகிறார், அவ்வளவு தான். பார்வதியாக அஞ்சலிக்கு நல்ல பாத்திரம். எஸ்.ஜே. சூர்யா (SJ Surya) மார்க் ஆண்டனி படத்திற்கு பிறகு மீண்டும் தனது வில்லத்தனத்தால் மிரட்டி இருக்கிறார். படத்தின் ஒளிப்பதிவு வழக்கம் போல் பல பிரமாண்ட கூட்டம், செட் என அனைத்தையும் அத்தனை அழகாக காட்டியுள்ளனர். தமனின் இசையில் தொப், ஜருகண்டி பாடல் அட்டகாசம். வசனங்கள் சில இடங்களில் சிறப்பாக உள்ளன.
மைனஸ்:
கதையிலேயே சலிப்பும், ரொட்டீனும் இருப்பது தான் பிரச்சனை. ஷங்கர் படங்களில் காணப்படும் எமோஷனல் கனெக்ட் இதில் மிஸ்சிங். கதை நம் மனதை தொடவில்லை. நாயகன் வெற்றி பெற வேண்டும் என்ற உணர்ச்சியை நம்முள் தூண்டவில்லை. முதல் பாதியில் உள்ள நிறைய காட்சிகள் அவரது பழைய படங்களை நியாபகப்படுத்தின. ல காட்சிகள் இரண்டாம் பாதியில் ஒட்டவில்லை. என்னதான் கமர்சியல் படம் என்றாலும், ஏகப்பட்ட இடங்களில் லாஜிக் மீறல்கள் உள்ளன. ஷங்கர் நடத்தும் அரசியல் பாடம் எல்லாம் அவுட்டேட்டட் ஆகி அழிந்துவிட்டது.
இந்தியன் 2 அளவிற்கு இல்லை என்றாலும், கேம் சேஞ்சர் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக இது ஷங்கரின் கம்பேக் படமாக இருக்காது.