Bigg Boss Tamil Season 8 | Day 94 Promo (Photo Credit: @VijayTelevision X)

ஜனவரி 08, ஈவிபி பிலிம் சிட்டி (Cinema News): விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 (Bigg Boss Tamil) நிகழ்ச்சி, 94 நாட்களை கடந்து ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. ரியாலிட்டி ஷோ-வான பிக் பாஸ் இன்னும் சில வாரங்களில் இறுதிக்கட்டத்தை எட்டவுள்ளது. 18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் தமிழ் சீசன் 8 போட்டியில், இறுதிக்கட்டத்தை நோக்கிய பயணத்தில் தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, ராயன், சௌந்தர்யா, வர்ஷினி, விஷால் ஆகியோர் எஞ்சி இருக்கின்றனர். ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவ குமார், ஆர்.ஜே ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா, ரஞ்சித், அன்ஷிதா, ஜெப்ரி, மஞ்சரி, ராணவ் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். Toxic: Birthday Peek: டாக்சிக் படத்தின் அசத்தல் பீக் வீடியோ.. மிரளவைக்கும் காட்சிகள்.. லிங்க் உள்ளே.! 

விறுவிறுப்பு பெற்ற ஆட்டம்:

எலிமினேஷன் முறையில் வெளியே சென்றவர்களில் வர்ஷினி, தர்ஷா, சிவகுமார், அர்னவ், ரவீந்தர், ரியா, சச்சினா, சுனிதா ஆகியோர் போட்டியின் இறுதி தருவாயில் மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் அருண் பிரசாத், தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், பவித்ரா, சௌந்தர்யா, விஷால் ஆகியோர் இருக்கின்றனர். அதேபோல, நடப்பு வாரத்தில் பழைய போட்டியாளர்களும் பங்கேற்று இருப்பதால், அவர்கள் மிட் வீக் எவிக்சனையும் அறிவித்து இருக்கின்றனர். இதனால் போட்டியாளர்கள் & பார்வையாளர்களிடம் ஆட்டம் விறுவிறுப்பு பெற்றுள்ளது.

ஆட்டம் - பாட்டம் கொண்டாட்டம்:

இன்று வெளியாகியுள்ள பிக் பாஸ் ப்ரோமோவை பொறுத்தவரையில், ரவீந்தர் போட்டியாளர்களிடம் பிக் பாஸ் வீட்டின் விதிமுறையை மீறும் வகையில் சில வாதங்களை முன்வைக்கிறார். இதனால் அவரை அழைத்து பிக் பாஸ் கண்டிக்கிறார். மேலும், இன்றைய டாஸ்கில் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என நிறைந்து காணப்பட்டுள்ளது. இறுதியாக ஜாக்குலின், சாச்சனா செய்வது சரியில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே, அதனை விமர்சித்து பிரபலமடைந்த ரவீந்தர், திட்டத்துடன் வீட்டிற்குள் சென்றாலும், முதல் வாரத்திலேயே வெளியே அனுப்பி வைக்கப்பட்டார். தற்போது மீண்டும் வந்து ஒருசில சர்ச்சைக்குரிய வகையில், பிக் பாஸ் விதியை மீறி செயல்பட்டு இருக்கிறார். இதனால் அவர் வீட்டில் இருந்து பிக் பாஸ் நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் வாய்ப்புகளும் இருப்பதாக கூறப்படுகிறது.

ரவீந்தரை பிக் பாஸ் கண்டித்த காணொளி:

ஆடிய ஆட்டம் என்ன? பக்கா என்டேர்டைன்மெண்ட் இன்று இரவு தயார்:

சாச்சனா குறித்து ஜாக்குலின் தீபக்கிடம் பேசியபோது: