ஜனவரி 09, திருப்பதி (Andhra Pradesh News): வைகுண்ட ஏகாதசி & சொர்க்கவாசல் திறப்பு திருவிழாக்கள் கோலாகலமாக கொண்டாட ஏற்பாடுகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்த பணிகள் அனைத்தும் நடைபெற்ற நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிகளை நேரில் கண்டு வர பக்தர்கள் பலரும் தயாராக இருந்தனர்.
டிக்கெட் வாங்க முண்டியடித்த கூட்டம்:
இதனிடையே, ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, ஏழுமலையான் கோவிலில், இன்று வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு இலவச தரிசன டிக்கெட் வழங்கும் நடைமுறை செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் நேற்று முதலாகவே இலவச தரிசன டிக்கெட்டுகளை வாங்க முண்டியடித்த இருந்தனர். டிக்கெட் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே சொர்க்கவாசல் பகுதி வழியாக செல்ல அனுமதி வழங்கப்படும் என்பதால், பக்தர்கள் பலரும் சொர்க்கவாசல் வழியாக சென்று வர முற்பட்டு டிக்கெட்டுக்காக காத்திருந்தனர். Breaking: எதிரி பெரியார்., இனி நாதகவின் பணி இதுதான் - சீமான் ஆவேசம்.. பரபரப்பு பேச்சு.!
தமிழகத்தை சேர்ந்தவர்களும் மரணம்:
இதனிடையே, கட்டுக்கடங்காமல் மக்கள் அதிகம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் வரை உயிரிழந்துள்ளனர். சேலம், பொள்ளாச்சியைச் சேர்ந்த 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் விபரம் சேகரிக்கப்படுகிறது. மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி, 6 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு திருப்பதி தேவஸ்தானம் மன்னிப்பு கோரியது.
நிதியுதவி அறிவிப்பு:
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தக் கோரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். "திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது. இந்த எதிர்பாராத துயர சம்பவத்தில் தங்கள் உறவுகளை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்" தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு அவர்களுக்கு நிதியுதவி அறிவித்துள்ளது. அது குறித்து வெளியான அறிக்கையில், "சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், மேச்சேரி கிராமம், தாசனூரைச் சேர்ந்த திருமதி மல்லிகா (வயது 55) க/பெ. கிருஷ்ணன் நேற்று (08.01.2025) ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றிருந்தபோது, அங்கு சொர்க்கவாசல் திறப்பிற்காக வழங்கப்பட்ட இலவச தரிசனத்திற்கான நுழைவுச்சீட்டை வாங்கும்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். Ranipet Accident: லாரி - மேல்மருவத்தூர் சுற்றுலா பேருந்து நேருக்கு நேர் மோதி சோகம்; 4 பேர் பலி., 30 பேர் படுகாயம்.!
இந்தத் துயரமான செய்தியை அறிந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் உடனடியாகத் தெரிவித்துக் கொண்டதுடன், உயிரிழந்த திருமதி மல்லிகா அவர்களின் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சார்பில் மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த திருமதி மல்லிகா அவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
2 லட்சம் இழப்பீடு அறிவித்த அரசு:
ஆந்திர மாநிலம், திருமலை திருப்பதி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் அறிவிப்பு#CMMKSTALIN | #DyCMUdhay | #TNDIPR | pic.twitter.com/6zhj9ngOtR
— TN DIPR (@TNDIPRNEWS) January 9, 2025