ஜனவரி 09, மும்பை (Technology News): பெரும்பான்மையான இந்தியர்களின் முதலீடு தங்கத்தில் (Gold) தான் உள்ளது. மனைகளில் முதலீடு செய்வதை விட தங்கத்தில் முதலீடு செய்வதை தான் மக்கள் தேர்ந்தெடுக்கின்றனர். தங்கத்தை ஆபரணமாகவோ, கட்டிகள், நாணயமாகவோ, தங்கப் பத்திரமாகவும் எதிர்கால தேவைக்காக சேமித்து வைப்பர். விழாக்களில் நகைகளை அணிவது போக மீதத்தை வங்கியில் சேமித்து வைப்பதுண்டு. ஆனால் வீடுகளில் வைக்கும் நகைகளை எவ்வாறு, எவ்வளவு வைக்க வேண்டும் என்ற வரையறை நம்மில் பலரும் அறிந்திராததே.
இந்தியாவில், வீட்டில் தங்கம் வைத்திருப்பதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் அதிகப்படியான தங்கம் வைத்திருப்பதற்கு நகைகளுக்கான சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும். மேலும் எவ்வளவு நகைகள் வைத்திருக்க வேண்டும் என்பது, ஒரு நபரின் பாலினம் மற்றும் திருமண நிலை ஆகியவற்றின் அடிப்படையில் நகையை வைத்திருக்கலாம். V Narayanan: இஸ்ரோ தலைவராக குமரியை பூர்வீகமாக கொண்ட வி.நாராயணன் நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு.!
வீட்டில் எவ்வளவு தங்கம் வைக்கலாம் (Gold storage at home):
திருமணமான பெண் 500 கிராம், அதாவது 62.5 சவரன் தங்கத்தையும், திருமணம் ஆகாத பெண் 250 கிராம், அதாவது, 31.25 சவரன் மதிப்புள்ள தங்கத்தை வைத்துக்கொள்ளலாம். திருமணமான மற்றும் திருமணம் ஆகாத என இருதரப்பு ஆண்களுமே 100 கிராம் எடையுள்ள அதாவது 12.5 சவரன் தங்க ஆபரணங்களை எவ்வித ஆதாரங்களும் இன்றியும் வைத்திருக்கலாம். இந்த அளவிற்குள் இருக்கும் தங்கத்திற்கு வருமான வரித்துறையினர் சோதனையில் பறிமுதல் செய்ய முடியாத அளவு. ஆனாலும் இதற்காக ஆவணங்கள் வைத்திருப்பது நல்லது. இந்த அளவுகள் வரி செலுத்துவோரிற்கு, வருமான வரித்துறையின் சோதனை கட்டுப்பாட்டு வரம்பிற்காக மட்டுமே.
தங்கத்தை போலவே அதிகப்படியான பணத்தை வைத்திருப்பதற்கும் ஆவணங்கள் தேவை. சரியான ஆதாரங்களுடன் (source of income) எவ்வளவு தங்கம் மற்றும் ரொக்கத்தை, மக்கள் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளலாம். வருமான வரி சோதனையின் போது ஆவணங்கலும், வருமானவரி கட்டியதற்கான சான்றும் வைத்திருக்க வேண்டும். வருமான ஆதாரத்தைக் காட்ட தவறும் பட்சத்தில் அந்த தொகை பறிமுதல் செய்யப்படுவதோடு அபராதம் மற்றும் தண்டனையும் விதிக்கப்படும்.