Murder | Crime File Pic (Photo Credit: Pixabay)

ஜனவரி 10, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டின் (Meerut) லிசாரி கேட் பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில், 3 குழந்தைகள் அவர்களின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜனவரி 08) மாலை முதல் அவர்களின் நடமாட்டம் இல்லாததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் உள்பகுதி பூட்டியே கிடந்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். Minor Girl Sexual Abuse: 8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை.. 20 வயது வாலிபர் வெறிச்செயல்..!

அடித்துக் கொலை:

தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தால், மேற்கூரை வழியாக காவல்துறையினர் உள்ளே சென்றனர். அப்போது, உயிரிழந்த 5 பேரின் தலையிலும் பலத்த காயம் இருந்தது தெரியவந்தது. 10 வயதுக்குட்பட்ட 3 குழந்தைகளும் ரத்த காயங்களுடன், படுக்கையில் கிடந்தனர். மேலும், அவர்களின் பெற்றோர் தலையில் படுகாயத்துடன் (Murder) தரையில் கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.