Malaysia Open 2025 (Photo Credit: YouTube)

ஜனவரி 07, கோலாலம்பூர் (Sports News): மலேசியா, கோலாலம்பூரில் (Kuala Lumpur) முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மலேசிய ஓபன் (Malaysia Open) பேட்மிண்டன் தொடர் இன்று (ஜனவரி 07) தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் பேட்மிண்டன் போட்டியான இதனை வெற்றியுடன் தொடங்க வீரர், வீராங்கனைகள் முயல்வதால் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் தனது முதல் சுற்றில் சீன தைபேயின் சி யு ஜென்னுடன் மோதுகிறார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய், முதல் ஆட்டத்தில் கனடாவை சேர்ந்த பிரையன் யங்கை சந்திக்கிறார். IND Vs AUS Test: பார்டர் கவாஸ்கர் ட்ராபியை கைப்பற்றியது ஆஸ்திரேலியா.. இந்தியாவின் கனவு முதல் முதலாக சுக்குநூறாகிய சோகம்.!

பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து போட்டியில் இருந்து விலகியுள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகளான மாள்விகா பான்சோத், ஆகர்ஷி காஷ்யப், அனுபமா உபாத்யாயா ஆகியோர் விளையாடுகின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி, முதலாவது சுற்றில் சீன தைபேயின் மிங் செ லூ-தாங் காய் வெய் ஜோடியுடன் மோதவுள்ளது.